11 மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர்

Last Updated : Jul 11, 2016, 01:59 PM IST
11 மீனவர் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: முதல்வர் title=

கடலில் மீன்பிடிக்கும் போது, உயிரிழந்த 11 மீனவர்களின் குடும்பத்திற்கு முதலவர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார். 11  மீனவர்களின் குடும்பத்திற்கும் தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கடந்த மார்ச் 3-ம் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம், சுந்தரமுடையான் கிராமத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவரின் மகன் அழகர்,

30.5.2016 அன்று சென்னை, மயிலாப்பூர் வட்டம், டுமிங்குப்பம் பகுதியைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் ஆரோக்கியம்,

3.6.2016 அன்று சென்னை, தண்டையார்பேட்டை வட்டம், புதுவண்ணாரப்பேட்டை, பல்லவன் நகர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரின் மகன் ஜெகதீசன்.

10.6.2016 அன்று திருவள்ளுவர் மாவட்டம், திரிச்சினாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த சங்கர்.

15.6.2016 அன்று நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் வட்டம், வெள்ளப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சாமிக்கண்ணு என்பவரின் மகன்கள் காளிதாஸ், கலைப்பாண்டி, கிருஷ்ணசாமி என்பவரின் மகன் வினித்; சாமந்தான்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரின் மகன் எழிலரசன்;

18.6.2016 அன்று காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் வட்டம், ஆலம்பரை குப்பம் கிராமத்தைச் சேர்ந்த சரசகோபால் என்பவரின் மகன் குப்புசாமி.

20.6.2016 அன்று தூத்துக்குடி மாவட்டம், திரேஷ்புரத்தைச் சேர்ந்த ராஜி என்பவரின் மகன் ரதராஜா;.

21.6.2016 அன்று திருவள்ளூர் மாவட்டம், திருவொற்றியூர் வட்டம், கத்திவாக்கம் கிராமத்தைச் சேர்ந்த திரு. சின்னசடையாண்டி என்பவரின் மகன் குப்பன்.

ஆகிய 11 மீனவர்கள் கடலில் மீன் பிடிக்கும் போது உயிரிழந்தனர்.

இந்த துயரச் சம்பவங்களில் உயிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.1 லட்சம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

Trending News