கருணாநிதியின் 95-வது பிறந்த நாளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!!

தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து! 

Last Updated : Jun 3, 2018, 07:25 PM IST
கருணாநிதியின் 95-வது பிறந்த நாளுக்கு ரஜினிகாந்த் வாழ்த்து!!  title=

தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வாழ்த்து! 

தி.மு.க தலைவர் கருணாநிதி தனது 95-வது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

கோபாலபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் அரசியல் தலைவர்கள் மற்றும் அவரது கருணாநிதியை நேரில் சந்தித்து வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். இதனிடையே கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழாவையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகின்றனர். 

இதற்கிடையே, பிரதமர் மோடி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ராகுல்காந்தி, திருமாவளவன்  மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கருணாநிதிக்குப் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியுள்ளது..!  

``நாம் பெரிதும் மதிக்கும் மரியாதைக்குரிய பெரியவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்.." என அவர் தெரிவித்துள்ளார். 

 

Trending News