‘ஒரு லைட் கூட மாற்ற முடியல, நாங்க வேணா எழுந்து போய்டவா’ - திமுக கவுன்சிலர் புலம்பல்

DMK Councillor Angry : மக்கள் ஒரு கோரிக்கையை தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகார வர்க்கத்திடம் முன்வைக்கின்றனர். அவர்கள், தங்களுக்கு மேலுள்ளவர்களிடம் அதை முன்வைத்து, போக வேண்டிய இடத்தில் எல்லாம் அந்த கோரிக்கைப் போய் சுற்றிவிட்டு மீண்டும் மக்களின் பயன்பாட்டுக்கு வந்துசேரும் வரை உள்ள சிக்கல் சொல்லிமாளாது.!  

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Aug 25, 2022, 05:40 PM IST
  • தாம்பரம் மாநகராட்சிக் கூட்டத்தில் சலசலப்பு
  • திமுக கவுன்சிலர்களே புலம்பும் அளவுக்கு அவல நிலை
  • ஒரு லைட்டக் கூட மாத்த முடியலனு கவுன்சிலர்கள் கடும் விரக்தி
‘ஒரு லைட் கூட மாற்ற முடியல, நாங்க வேணா எழுந்து போய்டவா’ - திமுக கவுன்சிலர் புலம்பல் title=

தாம்பரம் மாநகராட்சியில் திமுக கவுன்சிலர்களே புலம்பும் அவல நிலை நீடித்து வருகிறது. தாம்பரம் மாநகராட்சி, பம்மல் அலுவலகத்தில் மண்டலம் 1ல் இன்று மண்டல குழு கூட்டம் நடைபெற்றது. இதில், மண்டலக் குழுத் தலைவர் வே.கருணாநிதி தலைமைத் தாங்கினார். 

மேலும் படிக்க | மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் கவுன்சிலர்கள் என்ன ‘டம்மிகளா’?!

இதில் தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ் உள்ளிட்ட அனைத்து மாமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். பொதுவாக அந்தந்த மாமன்ற உறுப்பினர்கள் தங்களது பகுதிகளுக்கான கோரிக்கைகளை இக்கூட்டத்தில் முன்வைப்பது வழக்கம். 

அந்த வகையில், மண்டல குழு கூட்டத்தில் பேச ஆரம்பித்த திமுக கவுன்சிலர் நரேஷ் கண்ணா, கோரிக்கைகள் விடுத்து பல நாட்கள் ஆகியும் இன்னும் நிறைவேறாத கோபத்தில் புலம்பித் தீர்த்துவிட்டார். 

கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் நரேஷ் கண்ணா, ‘ஒரு லைட் கூட மாற்ற முடியல, ஏன் அதை கூட வழங்கமுடியாதா, என்ன பாவம் செய்தது அனகாபுத்தூர்’ என்று புலம்பித் தீர்த்து விட்டார். 

அதற்கு பதிலளித்த மண்டல பொறியாளர், மாநகராட்சி ஆணையர் கையெழுத்து போடவில்லை என்றும், அதனால் தான் பல்பு வழங்கவில்லை என்றும் பதிலளித்தார். அதன் பிறகு நரேஷ் கண்ணா பக்கத்தில் அமர்ந்திருந்த மற்றொரு பெண் கவுன்சிலரும் தங்களது பகுதி குறித்து விரக்தியை முன்வைத்தார். 

அப்போது பேசிய அவர், 6 மாதமாக ஒரு லைட் போட கூட முடியாத நிலையில் இருக்கிறோம் என்றும், 2006ல் மாற்றப்பட்ட லைட்டெல்லாம் இன்னும் மாற்றப்படவில்லை என்றும் கூறினார். இதற்காக பொதுமக்கள் போன்போல் போன் போட்டு கேட்கிறார்கள் என்றும் அவர் பங்குக்கு புலம்பித் தள்ளினார். 

இதையடுத்து, மீண்டும் பேசிய நரேஷ் கண்ணா, 48 கோடி நிதி வருதுன்னு சொன்னீங்க எதுவும் வரவில்லை என்றார். மேலும், என்ன நடைமுறையை பின்பற்றுகிறீர்களோ, இந்த மண்டலத்திற்கு மட்டும் என்ன விதி என்று தெரியவில்லை என்று விரக்தியின் உச்சிக்கே சென்ற அவர், முதலில் இதுபோன்று நடைபெறும் ஒரு மூன்று கூட்டத்திலாவது கமிஷனரை கலந்துகொள்ள செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 

மேலும் படிக்க | நகர்மன்றக் கூட்டத்தில் விவாதமாகும் ‘குப்பைக்’ கதைகள்.!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News