கடந்த ஆட்சியில் தூர் வாருகிறோம் என்று சொல்லி ஏமாற்றி உள்ளனர் - அமைச்சர் ரகுபதி!

கடந்த ஆட்சியில் தூர் வாருகிறோம் என்று சொல்லி தூர் வாராமல் விட்டு விட்டார்கள், ஆனால் நாங்கள் தற்போது குடி மராமத்து பணி மூலம் தூர் வாரி வருகிறோம் என்று ரகுபதி கூறி உள்ளார்.  

Written by - RK Spark | Last Updated : May 1, 2023, 01:18 PM IST
  • தூர்வாரும் பணிகள் சரியாக செய்யவில்லை.
  • நாங்கள் சிறப்பாக செய்து வருகிறோம்.
  • அமைச்சர் ரகுபதி புதுக்கோட்டையில் பேச்சு.
கடந்த ஆட்சியில் தூர் வாருகிறோம் என்று சொல்லி ஏமாற்றி உள்ளனர் - அமைச்சர் ரகுபதி! title=

கடந்த ஆட்சியில் மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 20 முதல் 30 சதவீதம் செலவு செய்திருந்தாலே பல இடங்களில் ஏரிகளுக்கு தண்ணீர் கிடைத்திருக்கும் அரிமளத்தில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியுள்ளார்.  புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் சிவன் கோவில் திடலில் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய கலையரங்கத்தை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தமிழக முதல்வரை மராமத்து நாயகன் என்று பெருமை படுத்திக் கொள்வது விட மராமத்து பணிகள் மக்களுக்கு சென்றடைந்து இருக்கிறது என்ற பெருமையே போதும் பட்டத்திற்காக நாங்கள் அந்த பணிகளை மேற்கொள்ளவில்லை, கடந்த ஆட்சியில் மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில் 20 முதல் 30 சதவீதம் செலவு செய்திருந்தாலே பல இடங்களில் ஏரிகளுக்கு தண்ணீர் கிடைத்திருக்கும்.  மக்களுக்காக உண்மையிலேயே ஏறி குளங்கள் தூர்வாரப்பட வேண்டும்கண்ணுக்கு தெரிகிற வளர்ச்சி பணிகளை தான் செய்து கொண்டிருக்கிறோம். 

மேலும் படிக்க | அண்ணாமலைக்கு தமிழர்கள் மீது அக்கறை கிடையாது - இயக்குனர் அமீர்!

கடந்த ஆட்சியில் தூர் வாருகிறோம் என்று சொல்லி தூர் வாராமல் விட்டு விட்டார்கள், ஆனால் நாங்கள் தற்போது குடி மராமத்து பணி மூலம் தூர் வாரி வருகிறோம், பத்திரிக்கையாளர்கள் பொதுமக்கள் நேரில் சென்று பார்த்துக் கொள்ளலாம். தூர்வாரப்படி முழுமையாக செம்மையாக மக்களுக்கு பயன்படும் படி செய்யப்படும்.  நாங்கள் செயல்படுத்தக்கூடிய தூர் வாரும் பணி எங்களுக்கு பயனுள்ளதாக இல்லாமல், மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்படி தூர் வாரும்பணி நடைபெறும் என்றும், நாங்கள் ஏரி குளங்கள் கண்மாய்கள், வரத்து, வாரிகள் ஆகியவற்றை மக்களுக்கு பயனுள்ள வகையில் உண்மையாக தூர் வாரும் பணியை மேற்கொள்வோம். கலைஞர் நகர்ப்புற திட்டத்தின் கீழ் குளங்கள் ஏரிகள் மேம்பாடு செய்திருந்தால் பேரூராட்சி பகுதியில் மக்கள் பயன்படுகிற வகையில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கம்பி அனைத்து முள்வேலி அமைத்து பேவர் பிளாக் கல் பதித்து தரப்படும் என்று பேசினார்.

மறுபுறம், சேலம் மாவட்ட திமுக தொழிற்சங்கத்தின் சார்பில் மே தின விழா கொண்டாட்டம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்றது.  சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மேற்கு மாவட்ட செயலாளர் டி எம் செல்வகணபதி கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ் ஆர் சிவலிங்கம் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தொழிற்சங்க கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். தொடர்ந்து அவர் பேசும்போது தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டலுக்கு விடை கொடுக்கும் வகையில் மே தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. 

தொழிலாளர்களின் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் கலைஞர் ஆட்சி காலத்தில் தான் தொழிலாளர்களுக்கென தனித்துறையை ஏற்படுத்தி அவர்களுக்கான நல உதவிகளும் அறிவித்தது கலைஞர் அரசுதான் என்றும் பெருமிததுடன் தெரிவித்தார்.  ஒவ்வொரு மே தினத்தன்று தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கவும் அவர்களை பாராட்டவும் திமுக அரசு என்றும் தவறியது  இல்லை தொழிலாளர் தேவையை அறிந்து எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் திமுக அரசு செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.  நிகழ்ச்சியில் தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் திமுகவினர் திரளாக பங்கேற்றனர்.

மேலும் படிக்க | பேனா நினைவுச் சின்னம்: மெரினாவின் அடையாளம் போய்விடும்- ஜெயக்குமார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News