இந்தி பேசாத மாநிலங்களை ஒடுக்கும் முயற்சியில் பாஜக -தயாநிதி மாறன்!

இந்தி பேசாத மாநிலங்களை ஒடுக்கும் முயற்சியில் பாஜக ஈடுப்பட்டு வருவதா திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்!

Updated: Jul 14, 2019, 06:51 PM IST
இந்தி பேசாத மாநிலங்களை ஒடுக்கும் முயற்சியில் பாஜக -தயாநிதி மாறன்!

இந்தி பேசாத மாநிலங்களை ஒடுக்கும் முயற்சியில் பாஜக ஈடுப்பட்டு வருவதா திமுக எம்.பி தயாநிதி மாறன் குற்றம்சாட்டியுள்ளார்!

சென்னை மண்ணடியில் திமுக சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமை தயாநிதி மாறன் எம்.பி தொடங்கி வைத்தார். கண் மருத்துவம், சர்க்கரை, பல், ரத்தப்பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துறைமுகம் எம்.எல்.ஏ சேகர்பாபு உள்ளிட்ட தி.மு.க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தயாநிதி மாறன் எம்.பி, ''மத்தியில் மிருக பலத்துடன் ஆட்சியில் அமர்ந்துள்ள பாஜக அரசு, இந்தி பேசாத மாநிலங்களை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

மாநில மொழிகள் உள்பட 3 மொழிகளில் தபால் துறை தேர்வு எழுதலாம் என்ற இருந்ததை இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே எழுத வேண்டும் என மாற்றி இருப்பது கண்டனத்துக்குரியது. 

சம்மந்தப்பட்ட துறை அமைச்சரை சந்தித்து, மீண்டும் 3 மொழிகளில் தேர்வெழுதும் முறையை அமல்படுத்த வலியுறுத்துவோம்'' என தெரிவித்தார்.

முன்னதாக இந்திய தபால்துறை நடத்தும் பல்வேறு தேர்வுகளில் முதல்தாளுக்கான தேர்வுகள் இனி இந்தி மற்றும் ஆங்கில மொழியில் மட்டுமே வினாத்தாள்கள் வழங்கப்படும் எனவும் இரண்டாம் தாளுக்கான தேர்வு வினாத்தாள்கள் ஆங்கிலத்திலிருந்து அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்படும் எனவும் மத்திய அரசு அனைத்து தபால் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டுள்ளதன் படி., இந்தியா முழுவதும் நடைபெறும் தபால்துறை நடத்தும் பல்திறன் பணியாளர்கள் (Multi Tasking Staff), மெயில் குவார்ட் (Mail Guard), தபால்காரர் (Postman), அஞ்சலக உதவியாளர் (Postal Assistant), சார்டிங் அசிஸ்டெண்ட் (Sorting Assistant) போன்ற பணியிடங்களுக்கான தேர்வுகள் இதற்குமுன் அந்தந்த மாநில மொழிகளில் வழங்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்று வந்தன. 

கடந்த மே மாதம் 10-ஆம் தேதி இந்த பணிகளுக்கான தேர்வுகளின் பாடத்திட்டத்தினை மாற்றியமைத்து இந்தி மற்றும் ஆங்கிலத்திலும், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் 23 மாநில மொழிகளிலும் வினாத்தாள்கள் அமையும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.