அதிமுக இடைக்கால பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்: வங்கிகள் ஒப்புதல்

AIADMK Bank Account Operation: தன்னுடைய அனுமதி இல்லாமல் வரவு செலவு கணக்குகளை யாருக்கும் வழங்க கூடாது என்ற ஓ.பன்னீர் செல்வத்தின் கோரிக்கையை வங்கிகள் ஏற்றுக் கொள்ளவில்லை 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jul 20, 2022, 08:04 AM IST
  • அதிமுக இடைக்கால பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனை வங்கிகள் ஏற்றுக் கொண்டன
  • எடப்பாடி அணிக்கு மிகப்பெரிய வெற்றி
  • ஓபிஎஸ்ஸின் கோரிக்கைகளுக்கு போதுமான ஆதாரம் இல்லை: வங்கிகள் நிராகரிப்பு
அதிமுக இடைக்கால பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன்: வங்கிகள் ஒப்புதல் title=

சென்னை: அதிமுகவின் புதிய பொருளாளராக நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், பொருளாளராக செயல்பட கோரி வங்கிகளுக்கு இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அளித்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டன. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளராகவும், பொருளாளராகவும் உள்ள தனது அனுமதியில்லாமல் வங்கி பரிவர்த்தனைகளை செய்யக்கூடாது என்று வங்கிக்கு கடிதம் எழுதிய ஓ பன்னீர் செல்வத்தின் கோரிக்கைகளை வங்கிகள் நிராகரித்தன.

அதிமுக சார்பில் கரூர் வைஸ்யா மற்றும் இந்தியன் வங்கியில் கணக்கு உள்ளது. இந்த இரண்டு வங்கிகளிலும் சுமார் ரூ.300 கோடி வரை இருப்பு உள்ளது. கரூர் வைஸ்யா வங்கியில் மட்டும் அதிமுக கணக்கில் சுமார் ரூ.200 கோடிக்கு மேல் நிரந்தர வைப்பு தொகை உள்ளது. 

மேலும் படிக்க | அதிமுக வங்கிக் கணக்கில் பரிவர்த்தனை கூடாது: வங்கிக்கு ஓபிஸ் கடிதம்

இந்த வங்கிகளின் மேலாளர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எழுதியுள்ள கடிதத்தில், ‘அதிமுக வரவு-செலவு கணக்கை தன்னை கேட்காமல் மேற்கொள்ளக் கூடாது என எழுதி இருந்தார்.

தற்போது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், அதிமுகவின் வங்கி கணக்குகள் தொடர்பாக வங்கிகளுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், கட்சியின் இடைக்கால பொருளாளராக நியமிக்கப்பட்டிருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் வங்கிக் கணக்குகளை கையாள்வார் என்று எழுதியிருந்தார். 

OPS

கடந்த 12ஆம் தேதி வங்கிகளுக்கு எடப்பாடி பழனிச்சாமி எழுதிய இந்த கடிதத்தையும், அத்துடன் இணைக்கப்பட்ட ஆதாரங்களையும் சரிபார்த்த வங்கிகள் எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தை ஏற்றுக் கொண்டன.

மேலும் படிக்க | தொடரும் வருமான வரி துறை சோதனை! மீண்டும் சிக்கிய எஸ்பி வேலுமணி!

எதிர்வரும் 25 தேதி அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது, அதற்கு தேவைப்படும் தொகையை புதிய பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் காசோலை மூலம் வங்கியை நாடியுள்ளார். அதற்கு வங்கி ஏற்றுக்கொண்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் வெறும் கடிதம் மட்டுமே அனுப்பியிருந்தார், அதற்கு தேவையான போதுமான ஆவணங்கள் சேர்க்காத காரணத்தால் அவரது கோரிக்கையை வங்கிகள் ஏற்கவில்லை.

ஆனால் ஆவணங்களுடன் எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த கடிதத்தை வங்கிகள் ஏற்றுக் கொண்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையில் கட்சியில் நிலவி வரும் அதிகாரச் சண்டையினால், வருவாய்த் துறை சார்பில் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைத்தது.

தலைமை அலுவகம் யாருக்கு என்பது இன்னும் சற்று நாட்களில் தெரிந்துவிடும் என்ற நிலையில், முதலில் வங்கிக் கணக்குகளை இயக்கும் உரிமையை எடப்பாடி தரப்பு பெற்றுவிட்டது.

மேலும் படிக்க | AIADMK General Council Meet: அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News