மெட்ரோ பணிகளில் ஏற்பட்ட விபத்து! லாரி மற்றும் பேருந்து மீது பில்லர் விழுந்தது

Metro Construction Accident: குன்றத்தூரில் இருந்து ஆலந்தூர் நோக்கி சென்ற பேருந்து மீது மீது பில்லர் விழுந்த விபத்து

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 27, 2022, 08:56 AM IST
  • ராமபுரத்தில் மெட்ரோ பணிகளின் போது தவறி விழுந்த தூண்
  • பேருந்து மற்றும் லாரி மீது விழுந்த பில்லர்
  • விபத்தில் வாகனங்கள் சேதம்
மெட்ரோ பணிகளில் ஏற்பட்ட விபத்து! லாரி மற்றும் பேருந்து மீது பில்லர் விழுந்தது title=

சென்னை: ராமாபுரம் அருகே மெட்ரோ பணிகளின் போது மேம்பால பில்லர் சாய்ந்து விபத்து நிகழ்ந்தது. அதிகாலையில் பணிக்கு சென்ற அரசு பணியாளர்களை, ஏற்றி சென்ற பேருந்து மற்றும் லாரி மீது மெட்ரோ பில்லர்கள் விழுந்து இந்த விபத்து நிகழ்ந்தது. இன்று காலை குன்றத்தூரில் இருந்துTN01 N5450 என்ற அரசு பேருந்து கிளம்பிச் சென்றது. அந்த பேருந்தில், அரசு பேருந்துகளில் பணியாற்றும் எட்டு பணியாளர்கள் பயணம் செய்தனர். இவர்கள் அனைவரும் அலந்தூர் சென்றுக் கொண்டிருந்தனர்.

ஆலந்தூர் நோக்கி சென்றுக்கொண்டிருந்த பேருந்து, ராமபுரம் பகுதியில் செல்லும்போது, அங்கு மெட்ரோ மேம்பால பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக கிரேனில் இருந்த பில்லர் தவறி, பேருந்து மற்றும் லாரி மீது விழுந்தது. 

மேலும் படிக்க | அழகுக்கு வரையறை செய்ய நீங்கள் யார்? போராடும் அழகுப் பிரபலங்கள்

இந்த விபத்தில் பேருந்து ஓட்டுனர் உட்பட பலருக்கும் காயம் ஏற்பட்டது. பேருந்தின் ஓட்டுநர் அய்யாதுரை (52), பேருந்து நடத்துனர் பூபாலன் (45), லாரி டிரைவர் ரப்சித் குமார் ஆகியோருக்கு கை கால்களில் காயம் ஏற்பட்டு போரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக சென்னை பாண்டி பஜார் போக்குவரத்து புலனாய்வு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | நளினி, ரவிச்சந்திரன் மனுக்கள் மீது மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

மேலும் படிக்க | ராஜீவ் காந்தி கொலைவழக்கு: முருகன் 29ம் தேதி மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News