சென்னை: அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொது செயலாளர் திரு.டிடிவி தினகரன் அவர்களுடன் முன்னாள் முதலமைச்சர் திரு.ஓ.பன்னீர்செல்வம் அவர்களும் மற்றும் திரு.பண்ருட்டி ராமச்சந்திரன் அவர்களும் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரு.டிடிவி தினகரன் அவர்களின் அடையார் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, பண்ருட்டி ராமச்சந்திரனும் உடனிருந்தார்.
இந்த சந்திப்பின்போது அடுத்தகட்ட அரசியல் நகர்வு மற்றும் முக்கிய விஷயங்கள் குறித்து, டிடிவி தினகரனுடன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட பலரும் ஆலோசனை நடத்தினார்கள்.
மேலும் படிக்க | அண்ணாமலையை கிழித்து தொங்கவிட்ட டி.ஆர். பாலு... 8ஆம் தேதி கிரிமினல் வழக்கு!
அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்த சந்திப்புக்கு பின்னர், அமமுக தலைவர் டிடிவி தினகரன் மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, இருவரும் இணைந்து செயல்பட முடிவு செய்திருப்பதாக இருவரும் ஒருமித்த குரலில் தெரிவித்தனர்.
திருச்சி மாநாட்டின்போதே, டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்பட வேண்டும் என தொண்டர்கள் விருப்பம் தெரிவித்ததாகக் கூறிய ஓ. பன்னீர்செல்வம், உரிய நேரம் வந்ததால் இப்போது சந்தித்ததாகவும் தெரிவித்தார். அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே தொண்டர்களின் விருப்பம் என்றும் தெரிவித்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ