CHENNAI: அமமுக (Amma Makkal Munnetra Kazhagam) பொருளாளரும், முன்னாள் எம்.எல்.ஏவுமான வெற்றிவேலுக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று காலமானார்.
தமிழக முன்னாள் எம்.எல்.ஏவும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் பொருளாளருமான வெற்றிவேலுக்கு (Vetrivel) கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார்.
கடந்த 6 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அவரது உடல்நிலை மோசமடைய, உடனடியாக சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடல்நிலை மேலும் மோசமடைய அக்டோபர் 9 ஆம் தேதி ஐசியுவுக்கு (ICU) மாற்றப்பட்டார். "அவர் வென்டிலேட்டரில் இருக்கிறார், தொடர்ந்து ஆபத்தான நிலையில் இருக்கிறார்" அவருக்கு "செயற்கை சுவாசம்" மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிதத்திருந்தது.
ASLO READ | தகுதிநீக்கம் செய்தாலும் தேர்தலை சந்திப்போம்- வெற்றிவேல்
2017 ல் முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமிக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதற்காக, அதாவது சொந்த கட்சிக்கு எதிராக வாக்களித்தாகக்க கூறி, சட்டமன்ற சபாநாயகர் பி தனபால் தகுதி நீக்கம் செய்த 18 அதிமுக எம்.எல்.ஏ.க்களில் வெற்றிவேலும் ஒருவர்.
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். AMMK கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரனின் (TTV Dhinakaran) நம்பிக்கைக்குரியவர்களில் இவரும் ஒருவர்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR