3 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்ல மாட்டோம் என்று வெற்றிவேல் தெரிவித்து உள்ளார்.
டிடிவி தினகரன் ஆதரவு 3 எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்தாலும் நீதிமன்றம் செல்ல மாட்டோம், தேர்தலை சந்திப்போம் என்று வெற்றிவேல் நிருபர்களிடம் இன்று கூறியுள்ளார். எங்களது ஸ்லீப்பர் செல்கள் இன்னும் அதிமுகவில் உள்ளனர். சிலர் அமைச்சர்களாக உள்ளனர் என்றும் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.
மேலும் 3 எம்எல்ஏக்கள் விரும்பினால் அமமுக சார்பில் போட்டியிடலாம் என்றும் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.