விருதுநகர் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 பேர் வேறு சிறைக்கு மாற்றம்

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 பேர் பாதுகாப்பு காரணங்களுக்காக வேறு சிறைக்கு மாற்றப்பட்டனர். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 26, 2022, 06:19 PM IST
  • விருதுநகர் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்
  • ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்ட 4 பேர் மதுரை சிறைக்கு மாற்றம்
  • பாதிக்கப்பட்ட பெண், குற்றவாளிகளின் உறவினர்களிடம் சிபிசிஐடி விசாரணை
விருதுநகர் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை - 4 பேர் வேறு சிறைக்கு மாற்றம்  title=

விருதுநகரில் 22 வயது பட்டியலின பெண்ணை அவரின் காதலன் ஹரிஹரன் உள்பட 8 பேர் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் இளம்பெண்ணின் காதலனும், விருதுநகர் திமுக இளைஞரணி உறுப்பினருமான ஹரிஹரன், அவருடைய நண்பர்கள் மாடசாமி, பிரவீன், விருதுநகர் 10-வது வார்டு திமுக இளைஞரணி அமைப்பாளர் ஜூனைத் அகமது மற்றும் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்கள் நான்கு பேர் என எட்டு பேரை கைது செய்தனர். 

இதில் ஹரிஹரனும் அவரது நண்பர்களும் ஸ்ரீவில்லிப்புதூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். பள்ளி சிறுவர்கள் நான்கு பேரும் மதுரை தெப்பக்குளத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் வேறு யாரேனும் சம்பந்தப்பட்டுள்ளனரா, இளம்பெண் தொடர்பான ஆபாச வீடியோ வேறு யாருக்கும் பகிரப்பட்டுள்ளதா என போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த வழக்கை சிபிசிஐடி-க்கு மாற்றி உத்தரவிட்டார். 

மேலும் படிக்க | விருதுநகரில் ஒரு 'பொள்ளாச்சி' சம்பவம்; வீடியோ... மிரட்டல்... வன்புணர்வு....!!!

Viruthunagar

இதைத்தொடர்ந்து இதுதொடர்பாக சிபிசிஐடி போலீசார் நேற்று  முதல் விசாரணையை துவக்கி உள்ளனர். விருதுநகரில் பாலியல் வன்கொடுமையால் பெண் பாதிக்கப்பட்ட வழக்கு தொடர்பான விபரங்களை  சிபிசிஐடி அலுவலகத்தில் விருதுநகர் டிஎஸ்பி அர்ச்சனாவிடம் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி கேட்டறிந்தார். நேற்று பாதிக்கப்பட்ட பெண்ணிடம் எஸ்பி முத்தரசி மற்றும் டிஎஸ்பி வினோதினி சுமார் 7 மணி நேரம் விசாரணை நடத்தினார். இன்று சிபிசிஐடி தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜகுமாரி, ஜான்கென்னடி, சாவித்திரி ஆகியோர் தலைமையில் மூன்று குழுக்களை அமைத்து விசாரணையை துரித படுத்த சிபிசிஐடி எஸ்பி முத்தரசி உத்தரவிட்டுள்ளார்.

மதுரை சிபிசிஐடி போலீஸார் விருதுநகரில் முகாமிட்டுள்ளனர். இவர்கள் கைது செய்யப்பட்ட எட்டு பேரின் வீடுகள் மற்றும் உறவினர் வீடுகளுக்கும் தனித்தனியாக இருசக்கர வாகனத்தில் சென்று விசாரணை நடைத்தியுள்ளனர். பாலியல் சம்பவம் நடைபெற்ற மெடிக்கல் குடோன் மற்றும் பெண்ணின் வீடு ஆகிய இடங்களில் சிபிசிஐடி காவல்துறையினர் ஆய்வு நடத்தினர். மேலும், கைது செய்யப்பட்ட பள்ளி மாணவர்கள் தவிர மீதமுள்ள நான்கு பேரை காவலில் எடுக்க எடுக்க திட்டமிட்டுள்ளனர். 

ஸ்ரீவில்லிபுத்தூர் கிளை சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரும் பாதுகாப்பு காரணங்களால் மதுரை மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விரைவில் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்ட நபர்களை காவலில் எடுத்து விசாரிக்க மனு தாக்கல் செய்யப்பட உள்ளது. இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட மாடசாமி என்பவர் ஸ்ரீவில்லிபுத்தூர் உள்ள நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

மேலும் படிக்க | விருதுநகர் பாலியல் வழக்கு: இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்-சீமான்!

Trending News