தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்த தமிழக புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன்.
கடந்த 21-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவின் வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்றது. இதனையடுத்து அவர் பண மோசடி செய்திருந்தது தெரியவந்தது. இந்நிலையில் அவர் தலைமைச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான கிரிஜா வைத்தியநாதன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இன்று காலை தலைமைச் செயலகத்திற்கு வந்த அவர் தனது பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் முதல்வர் பன்னீர் செல்வத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்து அவருடன் கிரிஜா வைத்தியநாதன் ஆலோசனை மேற்கொண்டார்.
Girija Vaidyanathan,senior IAS officer, after taking over as Chief Secy, called on Honourable CM Thiru.O.Panneerselvam at Secretariat today. pic.twitter.com/9xwKwoddrh
— AIADMK (@AIADMKOfficial) December 23, 2016