தமிழகம் மற்று புதுவையில் சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு!!
வங்கக் கடலில் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழக கடலோர மாவட்டங்களில் வரும் 29-ஆம் தேதி முதல் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன், நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது வரும் 25-ம் தேதி இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.
வரும் 25-ஆம் தேதி இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி, அது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கூறியுள்ளது. புயல் சென்னை மற்றும் நாகை இடையே வர வாய்ப்பிருப்பதாகவும், துல்லியமான விவரத்தை புயல் நெருங்கும்போது தெரிவிப்பதாகவும் வானிலை மைய அதிகாரி தெரிவித்தார்.
MeT dept, Chennai: A low pressure area is very likely to develop over Equatorial Indian Ocean&adjoining South-West Bay of Bengal around 25 April. It's very likely to intensify into a depression by 27 Apr,move towards Tamil Nadu coast&intensify into cyclonic storm by 29 Apr.(23.4) pic.twitter.com/DGCQueZnHl
— ANI (@ANI) April 23, 2019