வார்டு மறுவரையறை நடைமுறை எந்த நிலையில் உள்ளது - உயர்நீதிமன்றம் கேள்வி!

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பான நடைமுறைகள் எவ்வாறு உள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

Last Updated : Sep 24, 2018, 08:32 PM IST
வார்டு மறுவரையறை நடைமுறை எந்த நிலையில் உள்ளது - உயர்நீதிமன்றம் கேள்வி! title=

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பான நடைமுறைகள் எவ்வாறு உள்ளது என அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

உள்ளாட்சி அமைப்புகளின் வார்டு மறுவரையறை தொடர்பான நடைமுறைகள் எந்த நிலையில் உள்ளநு என வரும் அக்டோபர் 9-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிரப்பித்துள்ளது.

இது தொடர்பான வழக்கினை நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வார்டு மறுவரையறை செய்வதற்காக ஆணையம் அமைத்து அவசர சட்டம் பிறப்பித்த நிலையில், உள்ளாட்சி தேர்தலை நடத்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் திருத்தம் செய்து தாக்கல் செய்ய நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வார்டு மறுவரையறை தொடர்பான பணிகளை முடித்து அறிக்கை தாக்கல் செய்வதாக தமிழக அரசு தரப்பில் தெரிவித்தது குறித்தும் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அதன் நிலை என்ன என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர். 

இதன் பின்னர், இவ்வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 9-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்!

Trending News