தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு: ஐகோர்ட் பரிந்துரை

தமிழகத்தில் மே 1 மற்றும் மே 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Apr 26, 2021, 05:49 PM IST
தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு: ஐகோர்ட் பரிந்துரை

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காரணமாக மே 1 மற்றும் மே 2 ஆம் தேதிகளில் முழு ஊரடங்கு அறிவிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் பரிந்துரை செய்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரசின் (Coronavirus) 2வது அலை வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால்  இதுவரை இல்லாத அளவாக இன்று 2,767 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 113 ஆக உள்ளது. 

ALSO READ | தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை: நீதிமன்றம்

நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 172 பேர் ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 85 ஆயிரத்து 110 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 311 ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரமாக உள்ளது. இதனால் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஏப்ரல் 20 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சட்டமன்ற தேர்தல் (TN Assembly Elections) வாக்கு எண்ணிக்கை மே மாதம் 2 ஆம் தேதி நடைபெற உள்ளதால் அன்றைய தினம் (மே 1 மற்றும் மே 2) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுபவர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும். தேர்தல் பணி தொடர்பான வாகனங்களை மட்டும் மே 01, 02 தேதிகளில் அனுமதிக்கலாம் என்றும் ஐகோர்ட் (High Court) கருத்து தெரிவித்துள்ளது. எனவே இது குறித்த அறிவிப்பை ஏப்ரல் 28 ஆம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News