Tirchy Latest News: திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை அருகே விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் மதியழகன் (55). சினிமா துணை நடிகராக உள்ளார். இவரது மனைவி மாலதி (46). இவர்களது மகன் நடராஜ் (20).
மதியழகன் மனைவி மாலதி, விஸ்வாஸ் நகர் அருகே ஏபி நகரை சேர்ந்த உமாராணி (55) என்பவரிடம், 6 லட்ச ரூபாயை கந்து வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். வாங்கிய கடனை திரும்ப தராத காரணத்தினால், உமாராணி தனது வீட்டில் மாலதியை கடந்த 2 மாதமாக தனியறையில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.
மாலதியை மீட்ட போலீசார்
இதுகுறித்து மதியழகன் தம்பியும், சேலம் நீதிமன்றத்தில் பணிபுரியும் சதீஷ் என்பவர், திருச்சி வழக்கறிஞர்கள் சிலரை தொடர்புகொண்டு தகவல் தெரிவித்துள்ளார். அதையடுத்து, வழக்கறிஞர் திவாகர் தலைமையில் சில வழக்கறிஞர்கள், உமாராணியின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
மேலும் படிக்க | தூத்துக்குடியில் விவசாயி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை!
வீட்டிற்குள் நுழைய விடாத உமாராணி, அவர்களிடம், 2 மணி நேரத்திற்கு மேல் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அதையடுத்து வழக்கறிஞர்கள், திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த காந்தி மார்க்கெட் ஆய்வாளர் ரமேஷ், உதவி ஆய்வாளர் மகேஸ்வரி, சிறப்பு உதவி ஆய்வாளர் மணிகண்டன் உள்ளிட்ட போலீசார் உமாராணியின் வீட்டிற்கு விரைந்தனர்.
உமாராணியிடம் விசாரணை
அங்கு தனியறையில் அடைக்கப்பட்டிருந்த மாலதியை மீட்டனர். மீட்கப்பட்ட மாலதி, படபடப்பு நீங்காதவராக, கண்களில் நீர்பெருக, போலீசாரின் கால்களில் விழுந்து நன்றி தெரிவித்த காட்சி, காண்போரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
தொடர்ந்து, அவரை தனியறையில் அடைத்து வைத்திருந்த உமாராணியை, போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். மாலதியை மீட்ட காந்தி மார்க்கெட் போலீசார், மதியழகன் மகன் நடராஜின் நிலை என்ன என்பது குறித்து உமாராணியிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | கோவை: திமுகவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு - அண்ணாமலை சர்ச்சை பேச்சு
மாரியம்மன் அருள் கூறி வசூல்
விசாரணையில் மாலதி என்பவர் துணை நடிகராக சென்னையில் இருக்கும் மதியழகன் என்பவரது மனைவி ஆவார் என தெரியவந்தது. இவர் மகன் சினிமா குறும்படங்கள், விளம்பரப் படங்கள் எடுப்பதாக தெரிகிறது. இவருக்கு நெருக்கமானவர் ஒருவர் சேலம் பகுதியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் கூறி அதே பகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளாக தனியார் அப்பார்ட்மெண்டில் வசித்து வருகிறார் மாலதி.
மாலதிக்கு அவ்வப்போது மாரியம்மன் அருள் வரும் எனவும், அம்மன் அருள் வந்து பல குடும்பப் பெண்களுக்கு அருள் வாக்கு சொல்வதாகவும், அப்படி அருள்வாக்கு சொல்லி பல குடும்பத்தினரிடம் சகஜமாக பழகி வந்ததாகவும், இந்நிலையில் தனது கணவர் சினிமா துறையில் துணை நடிகராக இருப்பதாகவும், படம் எடுப்பதாகவும், தனக்கு நெருக்கமான (ஜெயக்குமார் என்பவர்) ஒருவர் சேலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து பல கோடி சம்பாதிக்கிறார் எனவும் கூறிவந்துள்ளார்.
போலி ஆவணங்கள் கொடுத்து கடன்
இந்நிலையில் சினிமா படம் எடுத்தால் அதிகம் லாபம் கிடைக்கும், ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் அதிகம் பணம் கிடைக்கும், தனது மகனுக்கு திருமண செலவிற்கு பணம் வேண்டும் என பல்வேறு முறையில் பேசி 5 லட்சம் முதல் சுமார் 50 லட்சம் வரை என 25க்கும் மேற்பட்டோர்களிடம் தனது வீட்டு பத்திரம், தனது நில பத்திரம் மற்றும் வங்கி காசோலை என பல போலி ஆவணங்களை கொடுத்து சுமார் பல கோடிக்கு மேல் கடன் பெற்றுள்ளதாக தற்போது முதல் கட்ட விசாரணையில் தெரிகிறது.
இதில் ஒரு சிலரிடம் இரண்டு கோடிக்கு மேல் கடன் வாங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சுமார் 6 லட்சம் கடன் கொடுத்த பாலக்கரை பகுதியைச் சேர்ந்த உமாராணி என்பவர் இனிஸ மாலதி பணத்தை திருப்பிக் கொடுக்க மாட்டார் என்பதை தெரிந்து அவரை தனது வீட்டில் அடைத்து வைத்து பணத்தை கொடுத்து உங்கள் குடும்பத்தினரை மீட்டுச் செல்ல சொல்லுங்கள் எனக் கூறியுள்ளார். மாலதியௌ சுமார் ஒரு மாதத்திற்கு மேலாக சிறைப்படுத்தி உள்ளனர் எனக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | பிடிஆர் கொடுத்த பெரிய அப்டேட்... ஐடி நிறுவனங்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு வருது..!
வைரலான வீடியோவின் விளைவு
இந்த தகவல் மாலதியின் குடும்பத்தினருக்கு தெரிந்திருந்தும், அவரை பணம் கொடுத்து மீட்க முடியாத சூழ்நிலையில், கடந்த வாரம் வழக்கறிஞர்கள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, புதன்கிழமை மதியம் அவர் திருச்சி காந்தி மார்க்கெட் போலீசாரால் மீட்கப்பட்டுள்ளார்.
தற்போது வீட்டு சிறையில் அடைத்த உமாராணி என்பவரையும், மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மாலதி என்பவரையும் போலீசார் விசாரணைக்காக காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கொண்டு சென்று விசாரணை செய்து வருகின்றனர்.
மாலதியை போலீசார் மீட்கும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலானதால், அந்த தகவல் அப்பகுதியில் காட்டுத் தியாக பரவியது. துணை நடிகர் மனைவி மாலதியிடம் பணம் கொடுத்து ஏமார்ந்த 25க்கும் மேற்பட்டோர் காவல் நிலையத்திற்கு வருகை தந்து நாங்களும் மாலதியிடம் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டுள்ளோம். எங்கள் பணத்தை மீட்டு தாருங்கள் என முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
கிணறு வெட்ட பூதம் தோன்றிய கதை
வீட்டு சிறையில் அடைக்கப்பட்ட பெண்ணை மீட்கப்பட்ட நிலையில் விசாரணையில் மாலதி என்ற பெண் அதிக வட்டி, ஆசை வார்த்தை கூறி பலரிடம், திருச்சி மாநகரில் பல்வேறு பகுதிகளில் சுமார் பத்து கோடிக்கு மேல் பணம் பெற்று உள்ளது தற்போது தெரிய வருகிறது.
இந்நிலையில் இந்த விசாரணை தொடரும் என கூறப்படும் நிலையில் புகார் அளிப்பவர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் என தெரிய வருகிறது. கிணறு வெட்ட பூதம் தோன்றிய கதையில், மீட்கப்பட்ட பெண்ணின் மீது இவ்வளவு புகாராக என அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர் போலீசார்.
மேலும் படிக்க | ஆந்திர போலீஸை காரை ஏற்றி கொலை செய்த செம்மரக் கடத்தல் கும்பலின் தலைவன் சரண்.!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ