தனியார் நிறுவனம் தோண்டிய 15 அடி குழி: 5 வீடுகளில் விரிசல், சுவர் இடிந்து விழுந்து விபத்து

சென்னை பெருங்குடியில் தனியார் நிறுவனம் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட 15 அடி குழியால் 5 வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளாது. மேலும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வீதிக்கு வந்துள்ளனர்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 6, 2024, 02:37 PM IST
  • தனியார் நிறுவனம் கட்டிடம் கட்ட தோண்டிய 15 அடி குழி.
  • 5 வீடுகளில் விரிசல்.
  • அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு. தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தனியார் நிறுவனம் தோண்டிய 15 அடி குழி: 5 வீடுகளில் விரிசல், சுவர் இடிந்து விழுந்து விபத்து title=

சென்னை பெருங்குடியில் தனியார் நிறுவனம் கட்டிடம் கட்ட தோண்டப்பட்ட 15 அடி குழியால் 5 வீடுகள் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளாது. மேலும் பல வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வீட்டை விட்டு வீதிக்கு வந்துள்ளனர்.

சென்னை பெருங்குடி பர்மா காலனி, திருவள்ளுவர் நகர், 10வது தெருவில் தனியார் நிறுவனம் தரைதளம் மற்றும் 4 அடுக்கில் கட்டிடம் கட்ட கட்டுமான பணியில் ஈடுபட்டு வருகிறது. இதற்காக பொக்லைன் மூலம் சுமார் 15 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி வருகின்றனர். பள்ளம் தோண்டப்பட்டதின் அருகில் உள்ள குடியிருப்பில் விரிசல் ஏற்பட்டு, நள்ளிரவு சுமார் 2:30 மணியளவில் 5 வீடுகளின் பக்கவாட்டு சுவர் இடிந்து விழுந்து வீடுகள் சரிந்து விபத்து ஏற்பட்டது. மேலும் பல வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. 

அப்பகுதியை சேர்ந்த முனியப்பன் என்பவர் நள்ளிரவில் சிறுநீர் கழிக்க எழுந்த நிலையில் வீடு விரிசல் விட்டதை பார்த்து அருகில் உள்ள அனைத்து வீடுகளில் உறங்கிக் கொண்டிருந்தவர்களையும் எழுப்பி வீட்டை விட்டு வெளியே வர செய்துள்ளார்.  உடனே மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்ததால் யாருக்கும் எந்த ஒரு காயமுமின்றி அப்பகுதி மக்கள் பெரும் உயிர் சேதத்தில் இருந்து காப்பாற்றப்பட்டனர். 

மேலும் முடிந்த அளவிற்கு வீட்டில் இருந்த பொருட்களையும் பாதுகாப்பாக எடுத்து வந்து சாலையில் வைத்துள்ள அப்பகுதி மக்கள், தங்க கூட இடம் இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். 

மேலும் படிக்க | அதானி, அம்பானியை வளர்க்கும் மோடிக்கு நேருவை பற்றி பேச என்ன தகுதி இருக்கிறது? கேஎஸ் அழகிரி

இதுகுறித்து அப்பகுதி மக்கள், இந்த குடியிருப்புகளின் அருகில் பள்ளம் தோண்ட துவங்கிய நாள் முதல் அருகில் உள்ள தங்களது வீடுகள் விரிசல் விட ஆரம்பித்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து பலமுறை அவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அந்த நிறுவனத்திடம் முறையிட்டும் அவர்கள் செவி சாய்க்காமல் அலட்சியம் காட்டும் வகையில் தொடர்ந்து பள்ளம் தோண்டும் பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் மக்கள் கூறியுள்ளனர். 

இந்த நிலையில் நேற்று அனைவரும் உறங்கி கொண்டிருந்தபோது நள்ளிரவில் வீடுகளின் சுவர்கள் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. “முனியப்பன் என்பவர் எங்களை எழுப்பவில்லை என்றால் நாங்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கி உயிர் இறந்து இருப்போம்” என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். 

மேலும் அனைத்து குடும்பங்களும் குழந்தைகளுடன் வசித்து வருவதாகவும், உணவு சமைக்கவும் முடியாமல், உறங்க இடமும் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாகவும், தற்காலிகமாக உறவினர்கள் வீட்டில் தங்கி வாடகை வீடை தேடி வருவதாகவும், தங்களது இடிந்த வீடுகளை அரசு மீண்டும் கட்டி தர வேண்டும் என்றும் மக்கள் கோரிக்கை வைத்தனர். 

தகவல் அறிந்த சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டு, பாதிப்பு குறித்து கணக்கிட்டு சென்றனர்.

மேலும் படிக்க | நாடாளுமன்ற தேர்தலுக்காக திமுகவின் தேர்தல் அறிக்கை! என்ன அம்சங்கள் இடம் பெரும்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News