குறையும் கச்சா ஆயில் விலை.. இந்தியாவில் 7 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை..!!

பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளத நிலையிலும், கடந்த ஒருவாரமாக எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே இருக்கின்றன. 

Written by - ZEE Bureau | Last Updated : Mar 23, 2020, 11:57 AM IST
குறையும் கச்சா ஆயில் விலை.. இந்தியாவில் 7 நாட்களாக மாறாத பெட்ரோல், டீசல் விலை..!!

புது தில்லி: கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் ஒரு பெரிய சுகாதார அவசரநிலையாக மாறியுள்ளது. இந்தியாவில் அதன் நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது அச்சத்தை கருத்தில் கொண்டு 75 க்கும் மேற்பட்ட நகரங்கள் பூட்டப்பட்டுள்ளன. அதாவது லாக்-டவுன் செய்யப்பட்டு உள்ளது. 

இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. சாலைகளில் ஒரு சில வாகனங்கள் மட்டுமே காணப்படுகின்றன. இதனால் பெட்ரோல் மற்றும் டீசலுக்கான தேவை கணிசமாகக் குறைந்துள்ளது. 

அதேநேரத்தில் கச்சா எண்ணெயின் விலை 30 டாலருக்கும் குறைவாக இருந்தபோதிலும், உள்நாட்டில் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை குறைக்கவில்லை. இன்றும் எந்த மாற்றமும் செய்யப்பட வில்லை. மார்ச் 16 அன்று இருந்த விலைகள் தான், கடந்த ஒருவாரமாக எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே இருக்கின்றன. 

சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று ஜனவரி தொடக்கத்தில் நடந்தது. அதன் பிறகு கச்சா எண்ணெய்யின் விலை கிடுகிடுவென அதிகளவில் உயர்ந்தது. ஆனால் பிப்ரவரி 27 முதல் அது தொடர்ந்து வீழ்ச்சியடைந்தது. இந்த வீழ்ச்சி மார்ச் 16 அன்று ஏற்பட்ட இடைவெளி இன்னும் அப்படியே உள்ளது. 

பெட்ரோல் மற்றும் டீசலின் அதிக விலை ஜனவரி மாதத்தில் இருந்தது. அதிலிருந்து இதுவரை சுமார் 6 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. மார்ச் மாதத்திலும் எண்ணெய் தேவை 11% க்கும் அதிகமாக குறைந்துள்ளது. 

இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலை என்ன என்பதை அறிந்து கொள்வோம்...

நகரம் பெட்ரோல் / லிட்டர் டீசல் / லிட்டர்
சென்னை ரூ. 72.28  ரூ. 65.71
டெல்லி ரூ. 69.59 ரூ. 62.29
மும்பை ரூ  75.30 ரூ. 65.21
கொல்கத்தா ரூ. 72.29 ரூ. 64.62

வரவிருக்கும் நாட்களில், கச்சா பீப்பாய்க்கு 20 டாலருக்கும் குறைவாக இருக்கலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர். ஆனால் அதேநேரத்தில் இந்தியாவில் பெட்ரோல் விலை குறைக்கப்படுமா? என்பது கேள்விக்குறிதான். அதை மத்திய அரசு தான் முடிவு செய்யும். வரும் நாட்களில் தெரியவரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் என்னவிதமான மாற்றம் ஏற்படும் என்று...!!

More Stories

Trending News