Applications For TN Engineering Arts Colleges 2024: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானதை தொடர்ந்து 2024ஆம் ஆண்டின் தமிழ்நாடு பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை குறித்த அறிவிப்பும் இன்று வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக வளாகப் பொறியியல் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழக உறுப்பு பொறியியல் கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வில் (TNEA Counselling 2024) கலந்து கொள்ள இணையதள வாயிலான விண்ணப்ப பதிவு இன்று (மே 6) முதல் ஜூன் மாதம் 6ஆம் தேதி வரை, அதாவது மாத காலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கும் வழிமுறை
www.tneaonline.org என்ற இணையதள வாயிலான விண்ணப்ப பதிவு முகவரியில் சென்று பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். மேலும், மேற்கண்ட இணையதளத்தில் மாணாக்கர்கள் பயன்பெறும் பொருட்டு அனைத்து விவரங்களும் அதில் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | TN 12th results 2024 Updates: 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு
அதாவது, விண்ணப்பிக்கும் முறை, சான்றிதழ்கள் பதிவேற்றும் முறை (ஒலி, ஒளி வாயிலாக), கடந்த ஐந்து ஆண்டுகளில் கல்லூரி பாடப்பிரிவு மற்றும் வகுப்பு வாயிலாக மாணாக்கர்களுக்கு ஒதுக்கப்பட்ட கட் ஆஃப் தரவரிசை விவரங்கள், தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் பற்றிய விவரங்கள், சிறப்பு ஒதுக்கீட்டில் சேர்வதற்கான சான்றிதழ் மாதிரிகள் ஆகிய விவரங்கள் அதில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?
OC/BC/BCM/MBC & DNC பிரிவினருக்கு விண்ணப்ப பதிவு கட்டணம் 500 ரூபாயும், SC/SCA/ST பிரிவினருக்கு 250 ரூபாயும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர, கலந்தாய்வில் கலந்து கொள்வதற்கான முன் வைப்புத் தொகை / கலந்தாய்வு கட்டணம் என எதுவும் இல்லை என்பதையும் விண்ணப்பதாரர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இணையதள வசதி இல்லாத மாணாக்கர்கள் பயன்பெறும் வகையில் விண்ணப்ப பதிவு மற்றும் கலந்தாய்வில் கலந்துகொள்ள உதவுவதற்காக தமிழ்நாடு முழுவதும் சென்ற ஆண்டை போலவே 110 தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையங்கள் நிறுவப்பட்டுள்ளன.
ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால்...
மாணாக்கர்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தொலைபேசி மூலம் தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டி பத்து இணைப்புகளுடன் கூடிய அழைப்பு மையம் தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் அமைக்கப்பட்டுள்ளது, இதன் அழைப்பு எண் : 1800-425-0110. மேலும் மாணாக்கர்கள் tneacare@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தங்கள் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
சென்ற வருடம் (2023) கலந்தாய்வில் பங்கேற்ற கல்லூரியின் எண்ணிக்கை 474 ஆகும். மொத்த இடங்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 21 ஆயிரத்து 196 ஆகும். அதில் மாணக்கர்களின் சேர்க்கை எண்ணிக்கை 1 லட்சத்து 69 ஆயிரத்து 887 ஆகும். இது, இதற்கு முந்தைய ஆண்டை( 2022) விட 12.05% சதவீதம் அதிகம் ஆகும்.
சென்ற வருடம் (2023), அரசுப்பள்ளியில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்ற மாணக்கர்களுக்கான மொத்த இடங்கள் 12,136. மாணக்கர்களின் சேர்க்கை எண்ணிக்கை 9,960. இது, இதற்கு முந்தைய ஆண்டை(2022) விட 11.80% சதவீதம் அதிகம் ஆகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை கல்லூரிகளில் விண்ணப்பிக்கும் வழிமுறை
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் பொறியியல் படிப்பிற்கு மட்டுமின்றி, அரசு கலைக் கல்லூரிகளில் சேரவும் மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2024-25ஆம் கல்வியாண்டிற்கான இளநிலைப் பட்டப்படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tngasa.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தாமாக இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது எனவும் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
மேலும் படிக்க | பிளஸ்-2 தேர்வு பொதுத்தேர்வு முடிவுகள்...ஆன்லைனில் பார்ப்பது எப்படி?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ