சென்னை: நீதி விசாரணை கோரி மார்ச் 8-ம் தேதி அன்று ஓ. பன்னீர்செல்வத்தின் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் தெரிவித்துள்ளார்.
சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக இரண்டாக பிளவுற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஜெயலலிதாவிற்கு அவ்வாறு சிகிச்சை அளிக்க வற்புறுத்தியதை யாரும் ஏற்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் உண்மைகளை பொதுமக்கள் அறிய, உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக வருகிற மார்ச் 8-ம் தேதி மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளதாக ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
மத்திய அரசு மாண்புமிகு அம்மா அவர்களின் மர்ம மரணத்திற்கு, நீதி விசாரணை அமைக்க வழியுறுத்தி உண்ணாவிரத அறப்போர். pic.twitter.com/lv38hdxTiE
— O Panneerselvam (@OfficeOfOPS) February 28, 2017