ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு ஏதிராக நெடுவாசலலில் மீண்டும் தொடர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளதாக அப்பகுதி மக்கள் அறிவித்துள்ளனர்.
கடந்த 1991-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டையில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டப் பணி மத்திய அரசால் நடந்து வருகிறது. இதன் மூலம் நாட்டுக்கு வருமானம் அதிகரிப்பதோடு, இறக்குமதி செலவும் குறையும். இதற்காக ஏக்கர் கணக்கில் விவசாயிகளிடம் அரசு நிலத்தை குத்தகையாக பெற்றுள்ளது. இத்திட்டத்திற்கான ஒப்பந்தங்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் கடந்த 15-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
இதனை தொடர்ந்து மத்திய, மாநில அரசை சார்ந்தவர் மக்களின் விருப்பம் இல்லாமல் இந்த் திட்டம் நிறைவேற்றப்படாது என்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதனைதொடர்ந்து தமிழகம் முழுவதும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு ஏதிரான போராட்டம் தற்காலிகாமாக நிறுத்தப்படுவதாக மக்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 27-ம் தேதி ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் தொடர்பாக தனியார் நிறுவனங்களுடன் மத்திய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது. இதனால் அதிருப்தியடைந்த நெடுவாசல் மக்கள் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஏதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
வரும் 6-ம் தேதி இயற்கை வேளான் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த தினம் கொண்டாடப்பட இருக்கிறது. இந்த பிறந்தநாள் விழாவில் நெடுவாசல் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராம மக்களுடன் கலந்தாலோசித்து போராட்டம் பற்றிய அறிவிப்பு வெளியிடப்படும் என்று போராட்டக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.