ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மீண்டும் ஆய்வு நடத்தினால், தானே களத்திற்கு சென்று கருப்புக்கொடி காட்டப்போவதாக தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்!
கரூரில் தி.மு.க மாணவர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும், பசுமைவழிச்சாலைக்கு எதிராக பொதுமக்களின் கைதுக்கு கண்டனம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னர் பேசிய மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆய்வு நடத்துவது மாநில சுயாட்சிக்கு எதிரானது என்றார். இதனைக் கண்டித்து ஆளுநர் அடுத்து ஆய்வு நடத்த செல்லும் இடத்திற்கு தாமே சென்று கருப்புக்கொடி காட்டவுள்ளதாவும் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.