சென்னை சேப்பாக்கத்தில் உள்ள விருந்தினர் மாளிகை முன்பு அய்யாக்கண்ணு தலைமையில் அரை நிர்வாணத்துடன் கையில் மெழுகுவர்த்தி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
விவசாய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
போராட்டம் குறித்து அய்யாக்கண்ணு கூறுகையில், விவசாயிகள் எவ்வளவுதான் போராடினாலும் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் விவசாயிகளை ஏமாற்றி வருகிறது.
தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் 41 நாட்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது, எங்களை சந்தித்து தமிழக முதல்வர் எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறினார். அதை இதுவரை நிறைவேற்ற வில்லை.
Tamil Nadu farmers resume their protest, farmers leader says "keep the promise, withdraw case from SC. Give pension to farmers above 60 yrs" pic.twitter.com/F6E0knoHUb
— ANI (@ANI_news) June 9, 2017
மத்திய, மாநில அரசுகள், விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் எங்கள் போராட்டம் தொடரும் என்று அய்யாக்கண்ணு கூறியுள்ளார்.
We will be here for 32 days, will continue to sit here if problem is not solved by then. Will expand agitation all over India:Farmers leader pic.twitter.com/5jDEDtdL67
— ANI (@ANI_news) June 9, 2017