ரயில்களில் படிக்கட்டில் பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து!

மின்சார ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை! 

Updated: Jul 30, 2018, 05:05 PM IST
ரயில்களில் படிக்கட்டில் பயணம் செய்தால் ரயில்வே பாஸ் ரத்து!

மின்சார ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்தால் ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை! 

கடந்த 24 ஆம் தேதி சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் சென்ற ரயிலில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்த போது, பரங்கிமலை ரயில் நிலையத்தில் உள்ள தடுப்பு சுவரில் மோதி 5 பேர் உயிரிழந்தனர். 

ரயில்வே துறையின் தொடர் அலட்சியத்தாலேயே விபத்துகள் அதிகரிப்பதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. எனவே, புறநகர் செல்லும் அனைத்து மின்சார ரயில்களிலும் மெட்ரோ ரயிலில் உள்ளது போன்று தானியங்கி கதவுகள் பொருத்தி பயணிகளின் பாதுக்காப்பை உறுதி செய்ய வேண்டும் என சென்னை பெரம்பூரை சேர்ந்த வழக்கறிஞர் சதீஷ் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கை நீதிபதிகள் வேணுகோபால், நிர்மல் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதையடுத்து, இதுதொடர்பாக வரும் 7ஆம் தேதிக்கும் தெற்கு ரயில்வே துறையும், தமிழக அரசும் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், சென்னையில் ரயில் பாதுகாப்புப் படை ஆணையர் லூயிஸ் அமுதன் செய்தியாலர்களிடம் பேசியபோது; ரயில்களில் படிக்கட்டில் நின்று கொண்டு பயணம் செய்யும் பயணிகளுக்கு ரயில்வே பாஸை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.