சென்னை ஐஐடியில் ஜாதிய பாகுபாடு தொடர்ந்து வருவதால் தாம் தனது பணியில் இருந்து வெளியேறுவதாக உதவிப் பேராசிரியர் விபின் புதியதாத் கடிதம் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐஐடியில் (IIT Madras) மானுடவியல் மற்றும் சமூகவியல் துறையில் உதவி பேராசிரியராக பணிபுரியும் விபின் புதியதாத். இவர் பணியாற்றிய துறையில் தனக்கு ஜாதி ரீதியான பாகுபாடு நிகழ்த்தப்பட்டதாக புகார் தெரிவித்துள்ளார். பணியில் சேர்ந்த 2019 ஆம் ஆண்டு முதல் பல்வேறு காலக்கட்டங்களில் ஜாதி ரீதியான (caste discrimination) பாகுபாட்டை சந்தித்ததாக உதவி பேராசிரியர் விபின் தெரிவித்துள்ளார்.
ALSO READ | சென்னை IITல் அதிர்ச்சி; எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானியின் மகன்
ஐஐடி போன்ற இடத்தில் ஜாதிய ரீதியான பாகுபாடுகள் நிகழ்வது தனக்கு பெரிய அளவில் அதிர்ச்சியாக இருப்பதாக பேராசிரியர் விபின் புதியதாத் தெரிவித்துள்ளார். மேலும், ஜாதி ரீதியான பாகுபாட்டை சுட்டிக்காட்டி ராஜினாமா செய்வதாக உதவி பேராசிரியர் கடிதம் அனுப்பி உள்ளார். இது தொடர்பாக ஐஐடி நிர்வாகத்திற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி நல ஆணைய உறுப்பினர்களை உள்ளடக்கிய விசாரணை அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் இஸ்லாமிய மாணவி பாத்திமா தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது ஐஐடியில் ஜாதி, மத பாகுபாடு இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். இந்த செயல் தற்போது மீண்டும் புகார் எழுந்துள்ளது.
இந்த கடிதத்தை அவர் சென்னை நிர்வாகத்திற்கு இ மெயில் மூலம் அனுப்பியுள்ளார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ALSO READ | சுகாதாரப் பணியாளர்களுக்காக Nano Filter-ஐ உருவாக்கிய IIT-Madras ஆராய்ச்சியாளர்கள்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR