Kallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த நபர்களை காவல்துறையினர் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர். இதுவரை சிபிசிஐடி போலீசார் 9 பேரை கைது செய்து உள்ளனர். இந்நிலையில், சென்னையை சேர்ந்த சிவக்குமார் என்பவர் மதுரவாயில் எம்ஜிஆர் நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் பதுங்கி இருந்தார். காவல்துறைக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், நள்ளிரவில் சென்னை காவல்துறையினர் கைது செய்து சிபிசிஐடி காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சிவக்குமாரிடம் முதல் கட்ட விசாரணை செய்ததில் சிவக்குமார் இதற்கு முன்பாக 17 பேரல் கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனாலை கொடுத்தது தெரியவந்துள்ளது. எவ்வளவு மெத்தனால் கலப்பது என்பது தொடர்பான விவரங்களையும் துல்லியமாக சிவக்குமார் தெரிவித்துள்ளதாகவும் விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இருப்பினும், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் இன்று கைது செய்யப்பட்ட சிவகுமாருக்கும் எந்த தொடர்பும் இல்லை என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. நேற்று செங்குன்றம் பகுதியில் 1800 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டது. மெத்தனாலை எடுத்து வந்த கெளதம், பரமசிவம், ராம்குமார் மற்றும் பாஞ்சிலால் ஆகிய நால்வரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் 1800 லிட்டர் மெத்தனாலை விற்பனை செய்த சிவகுமாரை மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கும் இவருக்கும் தொடர்பிருக்குமா? அல்லது அப்பகுதியில் வேறு யாரெனுக்கும் மெத்தனாலை விற்பனை செய்துள்ளாரா? என விசாரணைக்காக தற்போது சிபிசிஐடி போலீசாரிடம் சிவகுமாரை ஒப்படைத்துள்ளதுள்ளனர், மதுவிலக்கு போலீசார். சிவகுமார் மற்றும் 4 பேரும் சிபிசிஐடி போலீசார் கள்ளக்குறிச்சி அழைத்துச் சென்றனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம், சங்கராபுரம் பகுதிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் கள்ளச்சாராயம் குடித்ததால் பாதிப்புக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதுவரை 56 பேர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 150க்கும் மேற்பட்டோர் இன்னும் பல்வேறு மாவட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் அதிகபட்சமாக 107 பேர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் படிக்க | திமுகவின் கூட்டணி கட்சிகள் முழு அடிமைகள் தான் - பாஜக அண்ணாமலை!
இதுவரை கள்ளச்சாராயம் விற்ற கன்னுக்குட்டி என்ற கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா, கோவிந்தராஜின் சகோதரர் தாமோதரன், ஜோசப் ராஜா, முத்து, சின்னதுரை, மாதேஷ் உள்ளிட்ட 9 பேரை இதற்கு முன்னர் போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மெத்தனால் கோவிந்தராஜிற்கு எப்படி கிடைத்தது, யார் இவர்களுக்கு மெத்தனால் சப்ளையர் என கண்டுபிடிக்கும்படி முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறைக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது சிவக்குமாரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு மெத்தனாலை சப்ளை செய்துள்ளாரா என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். இவர் சென்னையில் பல தொழிற்சாலைகளில் இருந்து மெத்தனாலை பெற்றிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 10 லட்சம் ரூபாயை தமிழ்நாடு அரசு அறிவித்தது. அதுமட்டுமின்றி காயமடைந்தோருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணமும் அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, இந்த துயர சம்பவத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பல நலத்திட்டங்களையும் சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் படிக்க | 'தவறான மருந்தை சொல்கிறார் மா.சுப்பிரமணியன்' - கொந்தளித்த இபிஎஸ்... என்ன விஷயம்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ