CM ஆவோம் என EPS கனவில் கூட நினைத்திர்க்க மாட்டார்: ரஜினி!

எடப்பாடி பழனிசாமி அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள்; ஆனால், தடைகளை மீறி ஆட்சி நீடிக்கிறது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்!!

Last Updated : Nov 18, 2019, 10:50 AM IST
    1. முதலமைச்சர் ஆவோம் என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார்.
    2. எடப்பாடி பழனிசாமி அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள்; ஆனால் அதிசயம் நடந்தது, தடைகளை மீறி ஆட்சி நீடிக்கிறது.
    3. அது மாதிரியான அதிசயம், அற்புதம் நேற்றும் நடந்தது, இன்றும் நடக்கிறது, நாளையும் நடக்கும்.
    4. கமலுடன் 43 ஆண்டுகளாகக் காப்பாற்றிய நட்பை எஞ்சிய காலங்களிலும் காப்பாற்றுவோம் என்ற ரஜினி, கொள்கைகள், சித்தாந்தங்களில் மாற்றம் இருந்தாலும் இருவருக்கும் உள்ள நட்பு மாறாது.
CM ஆவோம் என EPS கனவில் கூட நினைத்திர்க்க மாட்டார்: ரஜினி! title=

எடப்பாடி பழனிசாமி அரசு நான்கைந்து மாதங்களில் கவிழ்ந்து விடுமென 99% பேர் சொன்னார்கள்; ஆனால், தடைகளை மீறி ஆட்சி நீடிக்கிறது என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்!!

கமல்ஹாசனின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை சிறப்பிக்கும் வகையில், “கமல்-60” என்ற நிகழ்ச்சி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், சினிமாவில் கடுமையாக உழைத்து முன்னேறியவர் கமல் என புகழாரம் சூட்டினார்.

களத்தூர் கண்ணம்மாவில் அவரைப் பார்த்து ஏற்பட்ட பிரமிப்பு இன்றும் மாறவில்லை என்று மேலும் தெரிவித்தார். நடிகர், இயக்குநர், பாடகர் என பல பரிமாணம் எடுத்தவர் என்றும், 10 வேடங்களில் நடித்ததால் அவர் உலகநாயகன் எனவும் ரஜினி குறிப்பிட்டார்.

இது குறித்து நிகழ்ச்சியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்; கமல்ஹாசன் ஒரு அறிவு ஜீவி என்றும், இந்தியாவில் கமல்ஹாசன் போல சினிமாவில் பன்முக திறமையை வெளிக்காட்டி வர யாராலும் முடியாது என்றும் புகழாரம் சூட்டினார். கமல்ஹாசனின் 60 ஆண்டு கலை பயணம் சாதாரண விஷயமல்ல என்றும் அவர் செய்த தியாகங்கள் ஏராளம் எனவும் கூறினார். நானும் பல கஷ்டங்கள் பட்டிருக்கிறேன். ஆனால் அது எல்லாம் கமல்ஹாசன் பட்ட கஷ்டங்களை ஒப்பிடுகையில் சாதாரணம் என தெரிவித்தார். 

கமல்ஹாசன் நடிப்பை என்னவென்று சொல்வது? அவரது நடிப்பை பார்த்து சந்தோஷம் அடைந்திருக்கிறேன். வியந்து பிரமித்திருக்கிறேன். ஏன் பல நேரங்களில் பொறாமை கூட பட்டிருக்கிறேன். கமல்ஹாசன் நடித்தபோது ஒரு சீனில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. ஒரு துணியை எடுத்து காயத்தை கட்டி 10 நிமிடங்களில் நடிக்க வந்தார். அவர் மகா நடிகன். அதுமட்டுமின்றி நடமாடும் பல்கலைக்கழகம். எங்கெங்கு எந்த விஷயம் கிடைத்தாலும் ஆராய்ந்து எடுப்பார்.

ஆராய்ந்த விஷயத்தை மக்களுக்கு சொல்ல நினைப்பார். ஆனால் அவரது பேச்சு புரியவில்லை என்கிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம். ஆனால் தூங்குபவர்கள் போல நடிப்பவர்களை என்ன சொல்வது?. அவரது பேச்சு எல்லாருக்குமே புரியும். தெரியாதவர்கள் போல நடிப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. எங்களது நட்பை யாராலும் பிரிக்க முடியாது. கருத்து, சித்தாந்தம் மாறலாம். ஆனால் நட்பு மாறாது. எங்களை பயன்படுத்தி அவரவர் கருத்துக்களை திணித்து எங்களை பிரிக்க முடியாது. இந்த நட்பை ரசிகர்களும் காப்பாற்ற வேண்டும். அன்பை விதையுங்கள் என கேட்டுக்கொண்டார். 

தொடர்ந்து பேசிய அவர், “2 ஆண்டுகளுக்கு முன்பு முதலமைச்சர் ஆவோம்” என்று எடப்பாடி பழனிசாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார். 10 நாட்கள் கூட தாங்காது, 4, 5 மாதங்களில் ஆட்சி கவிந்து விடும் என சொல்லாதவர்களே இருந்திருக்க முடியாது. ஆனால் அதிசயம் நடந்தது. நேற்று அதிசயம் நடந்தது. இன்றும் அதிசயம் நடக்கிறது. நாளையும் நிச்சயம் அதிசயம் நடக்கும் என்று கூறினார். 

 

Trending News