தமிழகத்தில் டெங்கு, பன்றிக் காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. டெங்கு காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அரசு அறிவித்துள்ளது. டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல்களால் இதுவரை 25-க்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட சுமார் 5000 பேர் இக்காய்ச்சல்களால் பாதிக்கபட்டு உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
டெங்கு மற்றும் பன்றிக் காய்ச்சல்களால் பாதிக்கபட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள் தொடங்கப்பட்டு சிகிச்சை அளித்து வரப்படுகிறது. காய்ச்சல் பரவுவதை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. எனவே மக்கள் அச்சப்பட வேண்டாம் என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
திறந்த நிலையில் இருக்க்சும் நீர்நிலை தேக்க தொட்டிகளை மூடி வைக்க வேண்டும். அக்கம்பக்கம் டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருக்கும் நீர்தேக்கங்களை சுத்தம் செய்யவேண்டும். நீர் தேங்காதபடிக்கு பார்த்துக்கொள்ள வேண்டும் என அனைத்து மாவட்ட ஆட்சியர் மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.