ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்படுகிறதா தலைமை செயலகம்?

ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தலைமை செயலகத்திற்கான கல்வெட்டு மீண்டும் பொருத்தப்பட்டிருப்பதால்   தலைமை செயலகம்  மீண்டும் மாற்றப்படுகிறதா என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Sep 18, 2021, 05:13 PM IST
ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்படுகிறதா தலைமை செயலகம்?

சென்னை:-  ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் தலைமை செயலகத்திற்கான கல்வெட்டு மீண்டும் பொருத்தப்பட்டிருப்பதால்   தலைமை செயலகம்  மீண்டும் மாற்றப்படுகிறதா என்ற பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில் 2010ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியில் 80,000 சதுர அடி பரப்பளவில் ரூ450 கோடியில் புதிய சட்டசபை வளாகம் மற்றும் தலைமை செயலகம் கட்டப்பட்டது. இதனை அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.  பின்னர்  அ.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் தலைமை செயலகம் அரசு பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. மேலும், கர்நாடகாவில் உள்ள விதான சவுதா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் சட்டசபை கட்டிடங்கள் கலை நயத்தோடு இருக்கும் நிலையில், திமுக அரசால் கட்டப்பட்டுள்ள கட்டிடம் எந்தவித அழகும் இல்லாமல் இருப்பதாக அப்போதைய தலைவர் ஜெயலலிதா விமர்சனம் செய்திருந்தார்.

chennai

இதைத் தொடர்ந்து, ஓமந்தூரார் அரசு மருத்துவமனை அதிமுக ஆட்சியில் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டது. தற்போது, இங்கு ஏராளமானோர் உயர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பேரிடர் காலத்தில் இந்த மருத்துவமனை பேருதவியாக இருந்தது. மேலும், இதன் அருகே ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டப்பட்டு இயங்கிவருகின்றன.  இந்நிலையில், அதிமுக ஆட்சியில் மாற்றப்பட்ட புதிய தலைமை செயலகம் கல்வெட்டு தற்போது அங்கு மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த கேள்வி எழுந்துள்ளது. இதனால் அன்றைய திமுக ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட புதிய சட்டசபை வளாகத்துக்கு தலைமை செயலகம் மாற்றப்படுகிறதா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

ஏனெனில், தற்போது தமிழகத்தில் திமுக ஆட்சி மீண்டும் அமைந்தவுடன், கருணாநிதி காலத்தில் நிறுத்திவைக்கப்பட்ட திட்டங்களை கொண்டு வருவதில், முதல்வர் ஸ்டாலின் தீவிரம காட்டி வருகிறார். இதனால் ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனை மீண்டும் தலைமை செயலகமாக மாற்றப்பட வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது.  இதனிடையே இது குறித்து, பொதுப்பணித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது,  பார்ப்பதற்கு பிரமாண்ட சிவலிங்கம் போன்று காணப்படும் இந்த கட்டடத்தில், சட்டசபை மட்டுமின்றி, முதல்வர், அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகளுக்கு ஒரே இடத்தில் அறைகள் அமைக்கப்பட்டன.

chennai

அதேசமயம் அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டாலும், இந்த கட்டடத்தின் பெருமை மற்றும் வரலாறு மக்களுக்கு தெரிய வேண்டும் என்பதற்காகவே, அகற்றப்பட்ட கல்வெட்டுகள் மீண்டும் பொருத்தப்பட்டுள்ளன. வேறு எந்த காரணமும் இப்போதைக்கு இல்லை என்று கூறியுள்ளார்.  அதேவேளையில், தலைமைச் செயலகத்தை மீண்டும் ஓமந்தூரார் தோட்டத்திற்கு மாற்ற வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலக ஊழியர் சங்கம் முதலமைச்சருக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக அனைத்து கோரிக்கைகளும் பரிசீலிக்கப்பட்டு விரைவில் நிறைவேற்றப்படும் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  நவீன வசதி கொண்ட மருத்துவமனை கட்டிடத்தை இடமாற்றம் செய்தால், திமுக அரசின் மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்படுத்தும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News