பாரதம் பிரகாசமாக ஒளிர்கிறது: இந்திய கிரிக்கெட் அணிக்கு சத்குரு வாழ்த்து

பிரிஸ்பேனில் நடைபெற்ற விறுவிறுப்பான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், அணி இந்தியா ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்தியா கோப்பையை  2-1 என்ற கணக்கில் வென்றது.  

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 19, 2021, 10:13 PM IST
  • இந்தியா ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
  • இதன் மூலம் இந்தியா கோப்பையை 2-1 என்ற கணக்கில் வென்றது.
  • இது நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
பாரதம் பிரகாசமாக ஒளிர்கிறது: இந்திய கிரிக்கெட் அணிக்கு சத்குரு வாழ்த்து

பிரிஸ்பேனில் நடைபெற்ற விறுவிறுப்பான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில், அணி இந்தியா ஆஸ்திரேலியாவை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதன் மூலம் இந்தியா கோப்பையை  2-1 என்ற கணக்கில் வென்றது.  இது நாடு முழுவதும் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. இது தான் இன்று பேசு பொருளாக உள்ளது. 

ஆஸ்திரேலியாவில் தொடர் வெற்றியை பெற்றுத் தந்த இந்திய அணிக்கு BCCI 5 கோடி போனஸை (bonus) அறிவித்து ஊக்கப்படுத்தியிருக்கிறது இந்த செய்தியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா (Jay Shah) தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வரலாற்று வெற்றி பெற்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வாழ்த்து கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “பாரதம் பிரகாசமாக ஒளிர்கிறது! கிரிக்கெட் எனும் இனத்தை -

மதம், இனம், சார்புகள் கடந்து இந்த தேசம் கொண்டாடட்டும். பாரத அணியே - அனைவரும் பெருமைப்படுகிறோம். வாழ்த்துகள் & ஆசிகள்” என தெரிவித்துள்ளார்.

ALSO READ | BCCI: ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றிக்கொடி நாட்டிய இந்திய அணிக்கு ₹5 கோடி Bonus

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

More Stories

Trending News