தமிழ் சினிமாவில் பல பயோபிக் கதைகள் வெளியாகி உள்ளது. அதில் வித்தியாசமான ஒரு பயோபிக் படமாக Bioscope அமைந்துள்ளது. சங்ககிரி ராஜ்குமார் சினிமாவில் உதவி இயக்குனராக வேலை செய்து, தனியாக ஒரு படத்தை இயக்க முயற்சி செய்கிறார். அந்த சமயத்தில் அவரது சித்தப்பா தன் எதிர்காலத்தை பற்றி சாமியார் சொன்னதை நம்பி, பயத்திலேயே தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் ராஜ்குமார் மூட நம்பிக்கையை பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த படம் எடுக்க முயற்சி செய்கிறார். ஆனால் அந்த கதையை படமாக எடுக்க எந்த ஒரு தயாரிப்பாளரும் முன் வரவில்லை.
மேலும் படிக்க | சசிகுமார் - சிம்ரன் நடிக்கும் டூரிஸ்ட் ஃபேமிலி! ரிலீஸ் எப்போது தெரியுமா?
இதனால் நானே தயாரிக்கிறேன் என்று மூட நம்பிக்கைக்கு எதிராக வெங்காயம் என்ற படம் எடுக்க முடிவெடுக்கிறார். ஆனால் படம் எடுக்க பண ரீதியாக பல பிரச்சனைகள் வருகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டு சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில் வெளியானது வெங்காயம் என்ற படம். படம் வெளியான சமயத்தில் முக்கியமான சமூதாய பிரச்சனையை பற்றி படம் பேசியதால் பல இயக்குனர்களின் பாராட்டை பெற்றது. இயக்குனர் சேரன் இந்த படத்தை அவரே தமிழகத்தில் மீண்டும் ரிலீஸ் செய்தார். பல விவாத நிகழ்ச்சிகளிலும் இந்த படம் இடம்பெற்று மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் எடுப்பதற்கு என்ன மாதிரியான சிரமங்களை எதிர்கொண்டேன் என்பதை ஒரு படமாக எடுத்துள்ளார் இயக்குனர் மற்றும் நடிகர் சங்ககிரி ராஜ்குமார்.
Small budget. Fresh faces. ig heart. #Bioscope captures the native innocence, realism, and charm of the countryside, wrapped in an intriguing exploration of film making. A story that feels raw, real, and rooted. Promising!
Trailer:https://t.co/ISQq92RDO6
@directorcheran pic.twitter.com/NAiR92ZNLh— Rebecca Shamasundari (@RShamasundariS) December 29, 2024
வெங்காயம் படத்தில் சிறப்புத் தோற்றங்களில் நடித்த சத்யராஜ் மற்றும் சேரன் உள்ளிட்டோர் பயாஸ்கோப்பில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் சங்ககிரி ராஜ்குமார், மாணிக்கம், வெள்ளையம்மாள் மற்றும் முத்தாய் ஆகியோர் பயாஸ்கோப்பில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சங்ககிரி ராஜ்குமார் இயக்கிய இந்த படத்திற்கு முரளி கணேஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், தாஜ்நூர் இசையமைத்துள்ளார். சந்திர சூரியன், பிரபு மற்றும் பெரியசாமி ஆகியோர் தயாரித்துள்ளனர்.
தனது கிராமத்தில் கிடைக்க கூடிய பொருட்களை வைத்து, சாதாரண ஒரு கேமராவை வைத்து, ஊர் சுற்றிலும் கடனை வாங்கி, உள்ளூர் மக்களை நடிக்க வைத்து எப்படி வெங்காயம் படத்தை எடுத்தேன் என்பதை அழுத்தமாக பயோஸ்கோப் படத்தின் மூலம் சொல்லி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார். கிராமத்து எதார்தத்தையும், உண்மையான வசீகரத்தின் தருணங்களையும் அழகாக திரையில் கொண்டு வந்துள்ளனர். வயதான பாட்டிகள், அவர்களின் ரசிக்கும் படியான நகைச்சுவை, எதிர்த்தமான பேச்சு பல இடங்களில் ரசிக்க வைக்கிறது.
இருப்பினும் ஒரு படமாக பயாஸ்கோப் அதிகம் ஈர்க்கவில்லை. சில படங்களில் காமெடி நன்றாக ஒர்க் ஆகி இருந்தாலும், திரைக்கதையை இன்னும் சற்று சுவாரஸ்யப்படுத்தி இருக்கலாம். தான் படம் எடுத்த அனுபவத்தையே ஒரு படமாக எடுக்க வேண்டும் என்ற ஐடியா நன்றாக இருந்தாலும், திரையில் அது வெற்றிகரமாக இல்லை. எந்த ஒரு உபகரணங்களும் இல்லாமல் படம் எடுக்க முடியும் என்பதை காட்டியுள்ளார். ஆனாலும் வரும் காலங்களில் கமர்சியல் சினிமாவிற்கு ஏற்ற சில வேலைகளை இயக்குநர் சங்ககிரி ராச்குமார் செய்ய வேண்டும்.
மேலும் படிக்க | ஒரு வழியாக வெளியாகும் ‘மத கஜ ராஜா’ படம்!! எப்போ தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ