செந்தில் பாலாஜியை ரவுண்ட் கட்டிய சவுக்கு சங்கர்! சிக்கப்போகும் அமைச்சர்!

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வார இறுதியில் சோதனையை தொடங்கினர். அவரது தம்பி அசோக் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது.  

Written by - Bhuvaneshwari P S | Edited by - RK Spark | Last Updated : May 29, 2023, 12:34 PM IST
  • கரூரில் வருமான வரித்துறை சோதனை.
  • அதிகாரிகளின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது.
  • திமுக கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செந்தில் பாலாஜியை ரவுண்ட் கட்டிய சவுக்கு சங்கர்! சிக்கப்போகும் அமைச்சர்!  title=

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனை தொடங்கியதில் இருந்து பல சர்ச்சைகள் அடுத்தடுத்து திமுக சிக்கி வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கியது, அவர்கள் காரை சேதப்படுத்தியது என இந்த பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதற்கு நடுவே பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டரில் செந்தில் பாலாஜி குறித்து தொடர்ந்து பல திடுக்கிடும் தகவல்களை ட்வீட் செய்து வருகிறார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடையவர்களின் இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வார இறுதியில் சோதனையை தொடங்கினர். அவரது தம்பி அசோக் வீட்டில் இந்த சோதனை நடைபெற்றது. கரூரில் வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகளை பணி செய்ய விடாமல் திமுகவினர் தடுத்தனர். அந்த வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியளித்தது. கரூர் மேயர் கவிதா அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்யும் வீடியோ வைரலானது. அதோடு அதிகாரிகளின் கார் கண்ணாடியும் உடைக்கப்பட்டது. 

மேலும் படிக்க | கோடி கணக்கில் கட்டப்படும் செந்தில் பாலாஜியின் புதிய வீடு! அதிகாரிகள் சோதனை!

இதுகுறித்து எழுந்த புகாரில் திமுக கவுன்சிலர்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இது மட்டும் இல்லாமல் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் வீட்டில் சோதனை நடத்திய வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தங்களைத் திமுகவினர் தாக்கவிட்டதாகக் கூறி வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை வருமான வரித்துறை இயக்குநர் சிவசங்கரன் மற்றும் கூடுதல் இயக்குநர் ஆகியோர் நேரில் சென்று நலம் விசாரித்தனர். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய சிவசங்கரன், வருமான வரித்துறை சோதனைக்குச் சென்ற பெண் அதிகாரி உட்பட  நான்கு பேரையும் திமுகவினர் தாக்கியுள்ளதாகவும், அதில் பெண் அதிகாரியின் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இதற்கு நடுவே செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தற்போது நடைபெற்று வரும் ரெய்ட் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு கல் குவாரிக்கும்,  கரூரைச் சேர்ந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்? தற்போது நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று விளக்கம் அளித்தார். வருமான வரித்துறை சோதனையின் போது அமைச்சரின் தம்பி அசோக் வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கார்களின் வீடியோவும் சமூக வலைதளத்தில் வைரலானது.  இப்படி பல சர்ச்சைகள் தொடர்ந்த நிலையில், சவுக்கு சங்கர் தனது ட்விட்டரில் பல ஆதாரங்களை அடுக்கினார். அவர், தன் சொந்த பிரச்சனையை திமுக பிரச்சனையாக செந்தில் பாலாஜி மாற்றியுள்ளார் என்றும், பாதி திமுக, செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, 70 சதவீதம் அதிகாரிகள் செந்தில் பாலாஜி கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், இப்படியே போனால் மு.க.ஸ்டாலின் பதவி பறிபோனால் வியப்பதற்கில்லை என்றும் விமர்சித்துள்ளார். 

அதுமட்டும் இல்லாமல் செந்தில் பாலாஜி தன் தம்பி மனைவியின் பெயரில் 300 கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட வீட்டை கட்டி வருவதாகவும் சவுக்கு சங்கர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த குற்றச்சாட்டுக்கு நடுவே தற்போது கட்டப்பட்டு வரும் பிரம்மாண்ட வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த வீட்டிற்கு  நேற்று மாலை மூன்று கார்களில் சென்ற அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த பிரம்மாண்ட வீட்டின் வீடியோவும் வெளியாகியுள்ளது. இதை எல்லாம் தாண்டி ஒரு பகிரங்க குற்றச்சாட்டையும் சவுக்கு சங்கர் முன்வைத்துள்ளார். அதாவது, வருமான வரித்துறையினர் நடத்தி வரும் சோதனையில், செந்தில் பாலாஜி தம்பியின் ரகசிய டைரி சிக்கியுள்ளதாகவும், அதில் கருப்பு பணம் குறித்த விவரங்கள் உள்ளதாகவும் அதனை வைத்து விசாரிக்க வருமான வரித்துறை சிறப்புக்குழு முடிவெடுத்துள்ளதாகவும் ட்வீட் செய்துள்ளார். 

தொடர்ந்து தனது ட்விட்டரில் செந்தில் பாலாஜி 300 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்ட வீடு கட்டுவதாக பல ஆதாரங்களுடன் பதிவிட்டு வந்தார் சவுக்கு சங்கர். இந்த சூழலில் கடந்த மே 15-ம் தேதி சவுக்கு சங்கர் மீது அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் நான்கு அவதூறு வழக்குகளை பதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | செந்தில்பாலாஜி வீட்டில் வருமானவரி சோதனை: சிபிஐ விசாரணைகோரிய மனு தள்ளுபடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News