சட்டப்பேரவையில் மகளிர் உரிமைத்தொகை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், மகளிர் உதவித்தொகை திட்டத்தை பாராட்டி வருகின்றனர். இந்த நூற்றாண்டில் மகத்தான திட்டமாக மகளிர் உதவித்தொகை திட்டம் பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டை வளமான, வலிமையான மாநிலமாக மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதிகள் மட்டுமல்லாமல் அளிக்காத வாக்குறுதிகளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது, சமூகத்தில் வெற்றி பெறக்கூடிய ஒவ்வொரு ஆணுக்குப் பின்னாலும் பெண் இருக்கிறார். தாய் மனைவி சகோதரி என ஆணுக்கு பின்னால் பெண் இருக்கிறார். பெண்களை கருத்தில் கொண்டு இந்த திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. Universal basic income என்ற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் வறுமை குறைய வாய்ப்பு உள்ளது என்றும், குழந்தைகள் கல்வி மேம்படும் என்றும் பெண்களின் தன்னம்பிக்கை உயரும் என்ற அடிப்படையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என முதல்வர் மு. க. ஸ்டாலின் தெரிவித்தார்.
மேலும் படிக்க | 10ஆம் வகுப்பு மாணவர்களின் கவனித்திற்கு! இன்று முதல் ஹால் டிக்கெட்
மேலும் பேசிய அவர், இந்த திட்டத்தின் மூலம் வறுமை குறைய வாய்ப்பு உள்ளது என்றும், குழந்தைகள் கல்வி மேம்படும் என்றும் இந்தத் திட்டத்தின் மூலம் பெண்களின் தன்னம்பிக்கை உயரும் என்ற அடிப்படையிலும் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக இந்த நிதி நிலையில் 7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வளவு பேர் பயன் பெறுவார்கள் என மனக்கணக்கு போட்டு . மகளிர் உரிமைத்தொகை திட்டம் இரண்டு நோக்கங்களை கொண்டது பெண்களுக்கு கொடுக்கும் அங்கீகாரம், ஆண்டுக்கு 12000 உதவித்தொகை என்பது பெண்களின் வறுமையை ஒழித்து பெருமையை ஒழித்து சுயமரியாதையோடு பெண்கள் வாழ்வதற்கு வித்திடும். இந்த திட்டம் என்பது தேவைப்படும் குடும்பத் தலைவிகள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் என தெரிவித்தார்.
யாருக்கெல்லாம் 1000 ரூபாய் உரிமை தொகை கிடைக்கும்?
இதனிடையே அண்மையில் தமிழ்நாடு பட்ஜெட்டில் தகுதிவாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 'தகுதிவாய்ந்த' என்ற வார்த்தைக்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கு விளக்கம் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சொற்ப ஊதியங்களில் வேலை செய்திடும் மகளிர், இல்லங்களில் பணியாற்றும் மகளிர் என ஏறத்தாழ ஒரு கோடி குடும்பத் தலைவிகள் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பயன்பெறுவார்கள் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க | திருச்செந்தூர் அருகே கடலில் விடப்பட்ட அரிய வகை ஆமை குஞ்சுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ