சென்னை: இன்று தமிழக சட்டப்பேரவையில் பள்ளி மற்றும் உயர்கல்வி தொடர்பான மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்பொழுது தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். ஆனால் அந்த விவாதத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை குறித்து எவ்வித விவாதமும், அறிவிப்பும் செய்யப்படவில்லை.
இதனையடுத்து, இதனையடுத்து சென்னை திருவல்லிக்கேணியில் ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறியது, கடந்த ஜனவரி மாதம் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம். மாணவர்கள் நலன் கருதி பணிக்குத் திரும்பினோம். அப்பொழுது பல ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் இன்று நடைபெற்ற மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் ஜாக்டோ ஜியோ கோரிக்கை குறித்தும், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கை குறித்தும் எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.
இதனால் வருகிற ஜூலை 7 ஆம் தேதி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சென்னை சேப்பாக்கத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் ஈடுபடுவோம் எனக் கூறினார்.