ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மதுரையில் கல்லூரி மாணவ-மாணவிகள் கண்களில் கறுப்புத்துணிக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர். தமிழர் திருநாளாம் பொங்கல் தமிழகத்தில் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடைவிதித்துள்ளது. இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாமல் உள்ளது.
இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று காலையிலேயே மதுரையில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கண்களில் கறுப்பு துணிக்கட்டி போராட்டம் நடத்தினர்.
இந்த போராட்டத்தில் அதிகளவு மாணவிகள் கலந்து கொண்டனர். காலை 7 மணி முதலே திரண்ட மாணவ, மாணவிகளால் மதுரை காந்தி அருங்காட்சியகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.