சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க திட்டத்திற்கு ரூ.4,770 கோடி கடன் வழங்க ஜப்பான் நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது!
சென்னையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விரைவில் சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்ட பணிகள் நடைபெறவுள்ளன. மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை ஒரு வழித்தடத்திலும், மாதவரத்தில் இருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் வரை மற்றொரு வழித்தடத்திலும் சுமார் 52 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்திற்காக 40,941 கோடி ரூபாய் செலவாகும் என திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 20,196 கோடி ரூபாயை கடனாக வழங்க ஜப்பான் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் நிறுவனம் முன்வந்துள்ளது.
இதில் முதற்கட்டமாக, 4,770 கோடி ரூபாயை கடனாக வழங்க, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறை கூடுதல் செயலருக்கும், ஜப்பான் நிறுவனத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இது குறித்த செய்தி அறிவிப்பினை தமிழக அரசு வெளியிட்டுள்ளது!