கோவை, சரவணம்பட்டியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அதில் மிதுன் என்ற மாணவர் 11 ஆம் வகுப்பு படித்து வருகிறார். வழக்கம்போல் பள்ளிக்குச் சென்ற அந்த மாணவன், சட்டையை இறுக்கமாக அணிந்து சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்து மாணவரிடம் கேள்வி எழுப்பிய அப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் சிவரஞ்சித், பின்னர் அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.
ALSO READ | ’பொறுமையை சோதிக்காதீங்க’ தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை ஆவேசம்
இதில் மாணவனின் கை, கால் மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய மாணவன் மிதுன், பள்ளியில் கொடுத்த சீருடை தனக்கு பொருத்தமாக இல்லை எனத் தெரிவித்தார். அந்த சீருடை இறுக்கமாக இருந்த நிலையில், அதனை நாள்தோறும் பள்ளிக்கு அணிந்து கொண்டு சென்றதாக தெரிவித்த அவர், அதற்காக இயற்பியல் ஆசிரயர் தகாத வார்த்தைகளில் திட்டியதாக கூறினார். மேலும், கடுமையாக தாக்கியதால், உடலில் கை, கால் மற்றும் முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் மாணவன் மிதுன் தெரிவித்தார்.
அனைவரது முன்னிலையிலும் அசிரியர் தன்னை கடுமையாக தாக்கியது அவமானமாக இருந்ததாக கூறிய மாணவன், சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்புவேன் எனக் கூறினார். இது குறித்து ஆசிரியரை விளக்கம் கேட்க செல்போனில் தொடர்பு கொண்டபோது, அவர் முறையாக பத்திரிக்கையாளர்களுக்கு பதில் அளிக்காமல் தொடர்பை துண்டித்துள்ளார். இதனிடையே, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ALSO READ | திருமண ஆசைகாட்டி ஏமாற்றிய ஆசிரியரால் தற்கொலை செய்து கொண்ட பெண்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR