ஜெயலலிதாவின் நினைவு நாளில் தலைவி பட ஸ்டில்களை பகிர்ந்தார் கங்கணா

‘அம்மா’ என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று பிரபல நடிகை கங்கணா ரணௌத் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2020, 01:53 PM IST
  • ஜெயலலிதாவின் நினைவு நாளில் கங்கணா ரணௌத் அம்மாவுக்கு அஞ்சலில் செலுத்தினார்.
  • பல பிரபல்லங்களும் அம்மாவை நினைவு கூர்ந்தனர்.
  • தலைவி படம் 2021 ஆம் ஆண்டில் திரைக்கு வரவுள்ளது.
ஜெயலலிதாவின் நினைவு நாளில் தலைவி பட ஸ்டில்களை பகிர்ந்தார் கங்கணா title=

முன்னாள் தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதாவின் நான்காவது நினைவு நாளான இன்று பலரும் அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். கோடிக்கணக்கான மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள ஆளுமைகளில் ஜெயலலிதாவின் பெயர் கண்டிப்பாக முன்னணியிலிருக்கும்.

‘அம்மா’ என அனைவராலும் அன்பாக அழைக்கப்படும் ஜெயலலிதாவின் நினைவு நாளான இன்று பிரபல நடிகை கங்கணா ரணௌத் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். கங்கணா ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படத்தில் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த தமிழக முதல்வருக்கு ஜெ.ஜெயலலிதாவுக்கு (J Jayalalitha) அஞ்சலி செலுத்திய கங்கணா, வெளிவரவிருகும் தனது படத்தின் சில ஸ்டில்களை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டார்.

இப்படத்தில் இன்னும் ஒரு வார படப்பிடிப்பு மிச்சமிருப்பதாக அவர் தனது ட்வீட்டில் கூறியுள்ளார். ஏ.எல் விஜய் இயக்கும் ‘தலைவி’ படம், இரு பாகங்களில் வெளியாகும்.

கங்கணா ரணௌத் (Kangana Ranaut) ட்விட்டரில் தன் தலைவி படத்தின் பல படங்களைப் பகிர்ந்துள்ளார். இதில், ஜெயலலிதாவைப் போலவே, அ.இ.அ.தி.மு.க (AIADMK) கட்சிக் கொடியை குறிக்கும் வகையில், அவர் சிவப்பு மற்றும் கருப்பு பார்டரைக் கொண்ட வெள்ளை நிற சேலையில் காணப்படுகிறார்.

புகைப்படங்களைப் பகிர்ந்துகொண்ட கங்கணா, “ஜெயா அம்மாவின் நினைவு நாளில், எங்கள் ‘தலைவி – ஒரு புரட்சிகரத் தலைவவி’ படத்தின் சில ஸ்டில்களைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது அணிக்கு, குறிப்பாக ஒரு சூப்பர் மனிதனைப் போல செயல்படும் எங்கள் அணியின் தலைவர் விஜய் சாருக்கு மிக்க நன்றி. இன்னும் ஒரு வாரத்தில் படப்பிடிப்பு முடிகிறது” என்று எழுதினார்.

பிற பிரபலங்களும் அம்மாவை நினைவு கூர்ந்தனர்

ஜெயலலிதாவின் நினைவு நாளில் நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் (Aishwarya Rajesh) மற்றும் வரலக்ஷ்மி ஆகியோரும் தங்கள் ட்விட்டர் பதிவுகள் மூலம் தங்கள் கருத்துக்களை பரிமாரிக்கொண்டனர்.

75 நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் டிசம்பர் 5 ஆம் தேதி ஜெயலலிதா ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார்.

ALSO READ: #MissYouAmma இளமை முதல் மறைவு வரை ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணம்

ஜெயலலிதாவின் ஒரு படத்தைப் பகிர்ந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ், “தமிழகத்தின் உயர்மட்ட ஆளுமைகளில் ஒருவரான, மறைந்த தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதா அம்மா அவர்களின் நினைவு நாளில் அவரை நினைவு கறுகிறேன். தொலைநோக்குப் பார்வையுடன் திறம் படைத்த ஆட்சியை அளித்த ஒரு உன்னத தலைவர்” என்று எழுதினார்.

 வரலக்ஷ்மியும் ஜெயலலிதாவின் பழைய புகைப்படத்தைப் பகிர்ந்துகொண்டு அவரை நினைவு கூர்ந்தார். "உண்மையான இரும்புப் பெண்மணி அவர்தான். அவர் ஒரு ஆச்சரியமான பெண்மணி. அவர் தனது வாழ்க்கையை உன்னதமான முறையில் வாழ்ந்தார். பல போராட்டங்களை எதிர்கொண்டு அவர் பல வெற்றிகளைக் கண்டார். அவர் ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகப்பெரிய ஊக்கத்தை அளித்து மிகப்பெரிய எடுத்துக்காட்டாய் வாழ்ந்து காட்டினார்” என்று எழுதினார்.

2021 இல் வெளிவருகிறது தலைவி படம்

ஷைலேஷ் ஆர் சிங் மற்றும் விஷ்ணு வர்தன் இந்தூரி இணைந்து தயாரிக்கும் தலைவி (Thalaivi)  படம் 2021 ஆம் ஆண்டில் திரைக்கு வரவுள்ளது. முன்னதாக, தலைவியின் முதல் பகுதி 2020 ஜூன் 26 அன்று வெளியிடப்படவிருந்தது. கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோய் காரணமாக, இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.

ALSO READ: J.Jayalalithaa: இரும்புப் பெண்மணி அம்மாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News