கிளாம்பாக்கமா? கேளம்பாக்கமா? கன்பியூஸ் ஆனா திமுக அமைச்சர்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை கேளம்பாக்கம் பேருந்து நிலையம் என்று மாற்றிக் கூறியுள்ளார் திமுக அமைச்சர் கே என் நேரு. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Feb 28, 2024, 10:42 AM IST
  • கேளம்பாக்கம் என மாத்தி கூறிய அமைச்சர்.
  • கிளாம்பாக்கம் என்பதற்கு பதில் மாற்றி கூறியுள்ளார்.
  • கேஎன் நேருவின் இந்த வீடியோ வைரல்.
கிளாம்பாக்கமா? கேளம்பாக்கமா? கன்பியூஸ் ஆனா திமுக அமைச்சர்! title=

சென்னையில் பிரதான பேருந்து நிலையமாக இருந்த கோயம்பேட்டில் அடிக்கடி டிராபிக் ஜாம் ஆவதால் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டது. சமீபத்தில் திறக்கப்பட்ட இந்த பேருந்து நிலையம் பல சர்ச்சைகளை உருவாக்கியது. பயணிகளுக்கு போதுமான பேருந்து வசதிகள் இல்லாமலும் ,சென்னையில் உள்ள மக்கள் நீண்ட நேரம் பயணம் செய்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வருவதால் நேர செலவும், பணச் செலவும் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தது. மேலும் சரியான போக்குவரத்து வசதிகள் செய்யப்படாமலேயே அவசர அவசரமாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ளது என்று பயணிகள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க | 'கலைஞர் என்றாலே போராட்டம்தான்...' மெரினாவில் நினைவிடம் திறப்பு... கருப்பு சட்டையில் ரஜினி!

இந்நிலையில், திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையர், சர்பிடி, தியாகராஜ பாகவதர் ஆகியோரது மணிமண்டபங்கள் திறப்பு விழாவுக்கு பின்னர் அமைச்சர் கே.என் நேரு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பஞ்சபூர். பேருந்து நிலையம் திறப்பு குறித்து கேள்வி எழுப்பிய போது... பணிகள் முடிந்த பிறகு தான் திறப்பு என்றும், கேளம்பாக்கம் போல இருக்கக் கூடாது என்றும் கேளம்பாக்கம் பேருந்து நிலையத்தை எல்லாரும் விமர்சனம் செய்கிறார்கள் என்றும், கோயம்பேடு விட கேளம்பாக்கம் தற்போது நன்றாக மாறிவிட்டது என கூறிவிட்டு கிளாம்பாக்கம் என மாற்றி கூறினார். 

அதன்படி கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் போல விமர்சனம் இருக்கக் கூடாது என்பதற்காக எல்லா பணிகளையும் முடித்துவிட்டு திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என அமைச்சர் நேரு தெரிவித்தார்.  நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏ கேளம்பாக்கம் பேருந்து நிலையம் எனக் கூறியதற்கு போக்குவரத்து துறை அமைச்சர் அது கேளம்பாக்கம் இல்லை கிளாம்பாக்கம் என திருத்தி கூறிய நிலையில் தற்போது திமுக அமைச்சரே கேளம்பாக்கம் என தொடர்ந்து பேசியது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் எம்ஜிஆருக்கு பிறகு ஜெயலலிதா தான் நன்றாக ஆட்சி செய்தார் என பிரதமர் மோடி பேசியது குறித்து கேள்விக்கு... அதை பிரதமரிடம் கேளுங்கள் என கூறிவிட்டு நகர்ந்து சென்றார்.

மேலும் படிக்க | அதிமுக கூட்டணி உறுதி எல்லாம் இல்லை - அன்புமணி ராமதாஸ் வைத்த டிவிஸ்ட்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News