Petrol Prices Latest Update: மக்களின் இன்றியமையாத தேவைகளில் ஒன்றாக இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை மாதம் இரு முறை, நிர்ணயம் செய்யும் முறை பழக்கத்தில் இருந்தது.
ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் (bharat Petroleum), இந்தியன் ஆயில் (Indian Oil) , ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் (Hindustan Petroleum) ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை தினசரி நிர்ணையிக்கின்றன. அதன் விலைகளின் இன்றைய நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.
ALSO READ | விரைவில் பெட்ரோல் 4 ரூபாயும், டீசல் 5 ரூபாயும் குறைய வாய்ப்பு -முழு விவரம்
ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் முன்னதாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. சில நாட்கள் முன்னதாக, பெட்ரோல், டீசல் விலைகள் (Petrol, Diesel Price) சதத்தை தாண்டி விட்டன.
இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பில், பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைக்கப்பட்டதை அடுத்து, சென்னையில் கடந்த 2 நாட்களாக ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ 99.47 என்ற விலைக்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ 94.39 என்ற விலைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை மாற்றம் ஏதும் இல்லை.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் முழுமையான லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. அதன் பின்னர் பெட்ரோல் டீசல் விலைகளில் மாற்றம் இல்லாமல் இருந்தது. அதன் பிறகு விலைகளில் தொடர்ந்து ஏற்ற இறக்கம் காணப்படுகிறது என்பதோடு, பல இடங்களில் பெட்ரோல் விலை ரூ.100க்கு அதிகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ALSO READ | RBI Employment: ரிசர்வ் வங்கியில் வேலை, ஒரு மணி நேரத்திற்கு 1000 ரூபாய் சம்பளம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR