Tamil Nadu Top News Today, Tamil Nadu Latest News: தமிழ்நாட்டில் 08.06.2022 இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை சிறிய குறிப்பாக இங்கே காணலாம்...
24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் திறந்திருக்கலாம்: தமிழ்நாடு அரசு அனுமதி
தமிழ்நாட்டில் 24 மணி நேரமும் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்த உத்தரவு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம்: காவல் ஆய்வாளர் இடமாற்றம்
சென்னையில் காவல் நிலையத்தில் கைதி விக்னேஷ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அயனாவரம் காவல் ஆய்வாளர் செல்வராஜ் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகிறது.
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கு
கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கில் கண்ணகியின் சகோதரர் மருது பாண்டியனுக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்த சென்னை உயர் நீதிமன்றம், அவரது தந்தை துரைசாமி உள்ளிட்ட 9 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 2003-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகேயுள்ள புதுக்கூரைப்பேட்டையைச் சேர்ந்த இரு வேறு சமூகத்தைச் சார்ந்த முருகேசன் - கண்ணகி ஆகிய இருவர் காதலித்து திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்துக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த கண்ணகியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், இருவருக்கு, வலுக்கட்டாயமாக விஷம் கொடுத்து கொலை செய்து, பின்னர் எரித்தனர்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடக்கம்
சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில், தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வருகிற 23-ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு மற்றும் விண்ணப்பிக்க கூடிய நடைமுறைகள் குறித்து குறித்து அரசு மற்றும் தனியார் கல்லூரி பிரதிநிதிகள் மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் இன்று கலந்தாலோசிக்க பட்டதாக தெரிவித்தார்.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பம் வருகிற 20ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் ஜூலை 19 வரை மாணவர்கள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்தார். பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கும் என அவர் குறிப்பிட்டார்.
எய்ட்ஸ் நோயாளிகளுக்கான கூட்டு மருத்துவ சிகிச்சை மையம்:
தமிழகத்தில் 8 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் எய்ட்ஸ் நோயாளிகளுக்கான கூட்டு மருத்துவ சிகிச்சை முதல் மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் திறந்து வைத்தார். புதிய எய்ட்ஸ் நோயாளிகள் கண்டறிதல் நோயாளின்யின் எதிர்ப்பு சக்தி உடைய அளவு குறித்து முழு பரிசோதனை செய்யப்பட்டு தொடர் சிகிச்சை இந்த மையத்தில் நடைபெறும்.
தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
பேருந்தில் பயணித்த முதியவர் நெஞ்சுவலியால் உயிரிழப்பு:
மஞ்சூரிலிருந்து மேட்டுபாளைத் திற்கு 50 பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தில் பயணித்த முதியவர் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழப்பு பேருந்தில் பயணம் செய்தவர்களே உயிரிழந்தவரை குன்னூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பேருந்தில் பயணித்த முதியவர் ஒருவர் நெஞ்சுவலி ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் சக பயணிகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
யூடியூபர் கார்த்திக் கோபிநாத்துக்கு ஜாமீன் பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவு
ஆவடி அடுத்த மிட்டனமல்லி பகுதியை சேர்ந்தவர் யூடியூபர் கார்த்திக் கோபிநாத் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவிலில் புணரமைப்பதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவரை ஜாமினில் விடுவிக்க கோரி அவரது வக்கீல் சார்பில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்திருந்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் யூடியூபர் கார்த்திக் கோபிநாத்திற்கு ஜாமீன் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
சினிமாவில் வரும் வன்முறை காட்சிகளில் எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற உத்தரவிட கோரிய வழக்கு
திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளின் போது ஆயுதங்கள் மற்றும் ரத்தம் குறித்த எச்சரிக்கை வாசகங்களை இடம்பெற உத்தரவிட கோரி சென்னை கொளத்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இரண்டாவது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
ஆர்த்தி ஸ்கேன் நிறுவனம் தொடர்பான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
சென்னையில் போராட்டம் நடத்திய செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு
பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட மெட்ரோ ரயில் நிலையம் அருகேயும், ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை முன்பும் 400க்கும் மேற்பட்ட செவிலியர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசாரின் அறிவுறுத்தலை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதால், போராட்டக்காரர்களை கைது செய்ய போலீசார் முயன்றனர்.அப்போது செவிலியர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில் காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் சென்னையில் போராட்டம் நடத்தியதற்காகவும், காவல் ஆய்வாளருக்கு காயம் ஏற்படுத்தியதற்காகவும் 487 செவிலியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்
அமைச்சர்களுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம்
கருவுற்ற தாய்மார்களுக்கு அரசு வழங்கும் சத்துப் பொருட்கள் பரிசுப் பெட்டக தொகுப்பு விவகாரம் தொடர்பாக அமைச்சர்களுக்கு பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பரப்பாக பேசப்பட்டு வரும் இந்த விவகாரத்தில் தனியார் தயாரிப்பான "Pro PL ஹெல்த் மிக்ஸ்" வழங்க ஒப்பந்தம் போடப்பட்டதால் அரசுக்கு 77கோடி ரூபாய் வரை இழப்பு என்று பாஜக குற்றம் சாட்டியிருந்தது.
"ஆவின் ஹெல்த் மிக்ஸ்" தயாரிப்பு தொடர்பாக உண்மை தெரியாமல் அமைச்சர்கள் அவசரகதியில் அறிக்கைவிட வேண்டாம் என பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ராயல் என்ஃபீல்டு பைக் திடீரென பற்றி எரிந்தது சென்னையில் பரபரப்பு
சென்னையில் சாலையில் சென்றுக் கொண்டிருந்த ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்களுக்கு கொரோனா
ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் மேலும் 29 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாடியில் இருந்து தவறி விழுந்தகுழந்தை உயிரிழப்பு
கும்பகோணம் பச்சையப்பன் தெருவில் உள்ள வீட்டின் நாலாவது மாடியில் இருந்து நாலரை வயது பெண் குழந்தை தவறி விழுந்தது. கீழே விழுந்த குழந்தை உயிரிழந்துவிட்டது. இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேட்டூர் அணையின் நீர்வரத்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 10,410 கனஅடியில் இருந்து 17,923 கனஅடியாக அதிகரித்துள்ளது.
இன்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
புதுக்கோட்டைக்கு இன்று வரும் முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார்.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2வது நாளாக அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு
சிதம்பரம் நடராஜர் கோவிலில் 2வது நாளாக அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்ய மறுப்பு தெரிவித்து நேற்று தீட்சிதர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய பெட்ரோல், டீசல் விலை
இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஆர்த்தி ஸ்கேன் சென்டரில் 2வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை
சென்னையில் உள்ள பிரபல ஸ்கேன் சென்டரில் 2வது நாளாக இன்றும் வரித்துறையினர் சோதனை தொடர்ந்து வருகிறது.