February 14: காதலுக்கு பிரச்சனை பண்ண வேண்டான்னு கட்டுப்படுத்துங்க! போலீஸில் புகார்

Valentines Day 2023 February 14: காதலர் தினத்தன்று அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 13, 2023, 05:30 PM IST
  • காதலிக்க தடை பண்ணாதீங்கப்பா! பாவம்லா
  • காதலர் தினத்தில் பிரச்சனை செய்பவர்களை தடுக்கக் கோரி போலீசில் மனு
  • காதலுக்கு தடைகள் வந்தால் அசருமா காதல்?
February 14: காதலுக்கு பிரச்சனை பண்ண வேண்டான்னு கட்டுப்படுத்துங்க! போலீஸில் புகார் title=

சென்னை: காதலர் தினத்தன்று அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் தடுக்க வேண்டும் என டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை டிஜிபி அலுவலகத்தில் பிப்ரவரி -14 காதலர் தினத்தன்று எவ்வித அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு மாணவர் இளையோர் கூட்டமைப்பு சார்பாக கோரிக்கை மனு  அளிக்கப்பட்டது. 

மனு அளித்த பின் தமிழ்நாடு மாணவர் மற்றும் இளையோர் கூட்டமைப்பை சார்ந்த லயோலா மணி செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார்.அப்போது பேசிய அவர், காதல் என்பது சாதி மற்றும் மதத்திற்கு அப்பாற்பட்டது ,ஆனால் சில சனாதனவாதிகள் காதலை சாதியுடனும் மதத்திடனும் ஒப்பிட்டு மதம் மற்றும் சாதி கலவரங்களை ஏற்ப்படுத்தும் வகையில் சமூக விரோத செயல்களை சிலர் ஈடுபட்டு வருகின்றன என்று தெரிவித்தார். 

மேலும் படிக்க | Happy Kiss Day 2023: காதலர்களுக்கான சிறந்த பரிசு மலரா முத்தமா அரவணைப்பா?

கட்டாய திருமணம் செய்துவைப்பது , பொது இடங்களில் இருப்பவர்களை தாக்குவது போன்ற அத்துமீறும் செயல்களை தடுத்து நிறுத்தவேண்டும் என டி எஸ் பி உயர் அதிகாரி  மார்டின் அவர்களிடம் மனு அளித்துள்ளதாகவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  டி எஸ் பி கூறியதாகவும் தெரிவித்தார். 

வேலண்டைன் தினம் என்பரு ஒரு பாதிரியாரின் பெயரில் கொண்டாடப்படுவதால் இது ஒரு கிருத்துவ கொண்டாட்டம் என்பதால் இது நமது கலாச்சாரத்திற்க்கு எதிரானது என சில நபர்கள் நடந்துகொள்கின்றனர். 

அர்ஜுன் சம்பத் காதல் திருமனம் செய்துகொண்டார் என தகவல்கள் வெளியாகி வருகிறது, அதிதீவரமான காதலின் வெளிப்பாடு தான் ஆன்மீகம் என அவர் கூறினார்.

மேலும் படிக்க |  அதிர்ச்சி! 11-ம் வகுப்பு மாணவனை 20 முறைக்கு மேல் கத்தியால் குத்தி கொலை செய்த 10 பேர்

முன்னதாக, பிப். 14ஆம் தேதியை பசுமாடு அணைப்பு (கட்டிப்பிடிக்கும்) தினமாக மக்கள் அனுசரிக்க வேண்டும் என கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறையின் இந்திய விலங்குகள் நல வாரியம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த தினத்தால் அன்பு உணர்வு பரவும் மற்றும், கூட்டு மகிழ்ச்சி ஊக்கப்படுத்தப்படும் என்று அரசு சார்பில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியூட்டின

"தாய் பசுவின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு, வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், நேர்மறை ஆற்றல் நிறைந்ததாகவும் மாற்றும் வகையில், அனைத்து பசுப் பிரியர்களும் பிப்ரவரி 14ஆம் தேதியை பசு அணைப்பு தினமாகக் கொண்டாடலாம்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுருந்தது. மேலும் பசுக்களை கட்டிப்பிடிப்பது "உணர்ச்சி வளம்" மற்றும் "தனிநபர் மற்றும் கூட்டு மகிழ்ச்சியை" அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டதன் பின்னணியில் போலீசில் புகராளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க |  குழந்தையை பெற்றெடுத்த திருநம்பி ; இந்தியாவில் முதல் முறை - ஆணா, பெண்ணா என்று கேட்டால்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News