50% பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து: அரசாணையை ரத்து செய்தது HC...

50% சிறுபான்மை மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கு சிறுபான்மை அந்தஸ்து என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்...

Last Updated : Jan 30, 2019, 12:37 PM IST
50% பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து: அரசாணையை ரத்து செய்தது HC... title=

50% சிறுபான்மை மாணவர்களை சேர்க்கும் பள்ளிக்கு சிறுபான்மை அந்தஸ்து என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்...

கிறிஸ்த்துவம், இஸ்லாம் உள்ளிட்ட சிறுபான்மை மத நிறுவனப் பள்ளிகளுக்கு நாடு முழுவதும் குறிப்பிடத் தகுந்த சலுகைகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தநிலையில், 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி, தமிழகத்தில் 50%  சிறுபான்மை பள்ளிகள் அந்தஸ்து தொடர்பாக தமிழக அரசு ஒரு ஆணை பிறப்பித்தது. பள்ளிகளில்  50% சிறுபான்மையின மாணவர்களை சேர்த்தால் அந்த பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.  

இந்த அரசாணையை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் ஆணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், பள்ளிகளுக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை எனவும் தெரிவித்துள்ளது. 

தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து 140 சிறுபான்மை பள்ளி நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். அந்த மனுவை கடந்த ஆண்டு விசாரத்த உயர் நீதிமன்றம், தமிழக அரசின் அரசாணைக்கு அப்போதே இடைக்காலத் தடைவிதித்து வழக்கை ஒத்திவைத்தது.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், “பள்ளிகளுக்கு சிறுபான்மை அளிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு கிடையாது. தேசிய சிறுபான்மை பள்ளிகள் ஆணையத்துக்கு மட்டுமே அந்த அதிகாரம் உள்ளது.

எனவே, தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதமானது. உரிய தகுதிகள் இருந்தும் மாணவர்கள் பள்ளிகளில் சேர்க்கப்படவில்லையென்றால், தேசிய சிறுபான்மை ஆணையத்தில் புகார் அளிக்கலாம்” என்று உத்தரவிட்டது. 

 

Trending News