உயிருடன் இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் போன்றவை வைக்க சென்னை ஐகோர்ட் இன்று தடை விதித்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தை சேர்ந்த திரிலோக்சன குமாரி என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட் உயிரோடு இருப்பவர்களுக்கு கட், அவுட் பேனர் வைக்க தடை விதித்துள்ளது.
1959-ம் ஆண்டு சட்டத்தை அவ்வப்போது திருத்த வேண்டும். கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாமல் கட் அவுட், பேனர் வைப்பதை தவிர்க்க வேண்டும். அவை போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். சுத்தமான சுகாதாரமான சூழ்நிலைகள் நிலவ உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பேனரில் உயிருடன் இருப்பவர் புகைப்படம் இடம்பெறக்கூடாது.
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.