டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும்: மெட்ராஸ் ஐகோர்ட்

COVID-19 ஊரடங்கு காலத்திற்கு மத்தியில், டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க மாநில அரசு எடுத்த முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் இன்று மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் பெஞ்ச் விசாரிக்க உள்ளது.

Written by - Shiva Murugesan | Last Updated : May 14, 2020, 08:46 AM IST
  • டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க மாநில அரசு எடுத்த முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் இன்று விசாரிப்பு
  • தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் திறக்கப்பட்டது.
  • இரண்டி நாட்களில் மட்டுமே மொத்தம் ரூ.294.7 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகி உள்ளது.
  • முதல் நாளில் ரூ.172.59 கோடிக்கும், 2வது நாளில் ரூ.122 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.
  • ஊரடங்கு காலம் இருக்கும் வரையும் மதுபானக்கடைகளை திறக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.
டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறப்பதற்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும்: மெட்ராஸ் ஐகோர்ட் title=

சென்னை: மார்ச் 24 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக மதுபானக் கடைகளை மூடப்பட்டது. இரண்டாவது முறையாக ஊரடங்கு உத்தரவு மே 3 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அதன் பிறகும், மூன்றாவது முறையாக ஊரடங்கு காலத்தை மே 7 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டது. அதில் மதுபானக் கடைகளை அந்தந்த மாநில அரசுகள் திறந்துக்கொள்ளலாம் என்பது தான். இந்த அறிவிப்பை அடுத்து, சில மாநிலங்கள் அடுத்த நாளே சில கட்டுப்பாட்டுடன் மதுபானக் கடைகளை திறந்தது. ஆனால் தமிழகத்தில் மே 7 ஆம் தேதி தான் அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டது. 

தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் சென்னையை தவிர மற்ற பகுதிகளில் திறக்கப்பட்டது. இரண்டி நாட்களில் மட்டுமே மொத்தம் ரூ.294.7 கோடி ரூபாய் அளவுக்கு விற்பனையாகி உள்ளது. முதல் நாளில் ரூ.172.59 கோடிக்கும், இரண்டாவது நாளில் ரூ.122 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டு உள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் கடைகள் திறப்பு என்ற அறிவிப்புக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. மாநிலம் முழுவதும் கொரோனா வேகமாக பரவி வரும் சூழலில் அரசின் முடிவை சரியானது அல்ல என பல தரப்பினரும் எதிப்பு தெரிவித்தனர். பெண்களும், பொதுமக்களும் இதனை எதிர்த்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

மேலும் டாஸ்மாக் கடைகளில் மது வாங்க நீண்ட வரிசையில் மதுபிரியர்கள் நின்றனார்கள். அதுமட்டுமில்லாமல் எந்தவித கட்டுப்பாடுகளையும், சமூக விலகளையும் கடைபிடிக்காமல் இருந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்தா நீதிபதிகள், ஊரடங்கு காலம் இருக்கும் வரையும் மதுபானக்கடைகளை திறக்கக்கூடாது மற்றும் ஆன்லைனில் மது விற்பதை குறித்து அரசு ஆலோசிக்கலாம் என்று கூறி, கடந்த மே 8 அன்று மதுபானக்கடைகளை மூட உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக 2 மேல்முறையீட்டு மனுக்களை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் மதுபானக்கடைகளை திறக்க அனுமதி அளிக்கக்கூடாது என வலியுறுத்தி போனிபாஸ் மற்றும் செல்வக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். கடந்த மே 11 அன்று, அந்த வழக்கை விசாரித்த மதுரை ஹைகோர்ட், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு இந்த வழக்குகளுக்கும் பொருந்தும் என உத்தரவிட்டுள்ளது.

இதனையடுத்து மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவையும் எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது. 

ஏற்கெனவே நாடு முழுவதும் மதுபானக்கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்கள் பலர் தாக்கல் செய்துள்ள நிலையில் நேற்று காங்கிரஸ் கட்சி சார்பிலும் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி மற்றும் நீதிபதிகள் வினீத் கோத்தாரி மற்றும் பி.என்.பிரகாஷ் ஆகியோர் அடங்கிய மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் முழு பெஞ்ச். COVID-19 ஊரடங்கு காலத்திற்கு மத்தியில், டாஸ்மாக் கடைகளை மீண்டும் திறக்க மாநில அரசு எடுத்த முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் வியாழக்கிழமை விசாரிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News