கைவிட்ட காதல்கணவன்; குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

காதல் கணவனை மீட்டுத் தரக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 8, 2021, 03:48 PM IST
கைவிட்ட காதல்கணவன்; குழந்தையுடன் தீக்குளிக்க முயன்ற இளம்பெண்

காதல் கணவனை மீட்டுத் தரக்கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இளம் பெண் கைக்குழந்தையுடன் தீக்குளிக்க முயற்சித்ததால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

திண்டுக்கல் (Dindigul) ஆர்விஎஸ் நகரை சேர்ந்தவர் நந்தினி. இவர் திருச்சி (Trichy) மாவட்டம் வையம்பட்டியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு காதலித்து வந்தார். பின்னர் இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்டனர். 

ALSO READ | திண்டுக்கல்லில் பயங்கரம்! பெண் தலையை வீட்டு வாசலில் வீசிய கொலையாளிகள்

இந்நிலையில் தற்போது கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு நந்தினி இரண்டு மாத கர்ப்பிணியாக இருந்தபோது கார்த்திக் நந்தினியை விட்டுவிட்டு சென்றுவிட்டார். தனது கணவர் எங்கு சென்றார் என தெரியாத நிலையில் இது தொடர்பாக நந்தினி கார்த்திக்கின் பெற்றோரிடம் கேட்து உள்ளார். 

No description available.

கார்த்திக்கின் பெற்றோர்கள் நந்தினிக்கு முறையான பதில் அளிக்காமல் தட்டிக் கழித்துள்ளனர். இதனால் இந்த சம்பவம் தொடர்பாக நந்தினி மகளிர் காவல் நிலையத்திலும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இவர் புகார் அளித்தும் இதுவரை கார்த்திகை கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதனால் மனம் உடைந்த நந்தினி இன்று (திங்கட்கிழமை) தனது கைக்குழந்தையுடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் தந்து உடம்பில் எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் கணவர் கார்த்திக் உடன் சேர்த்து வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

ALSO READ | Domestic violence:பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கொன்ற மகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News