தினமும் சரக்கு கேட்டு தொந்தரவு செய்த நண்பனைத் துடித்துடிக்க கொலை செய்த இளைஞர்!

தினமும் மது வாங்கித் தருமாறு வற்புறுத்திய நண்பனை இளைஞர் ஒருவர்  கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 6, 2022, 04:48 PM IST
  • ஆத்திரமடைந்து ஈஸ்வரனை அவரது வீட்டிற்குச் சென்று கொலை செய்தார்.
  • 24 மணி நேரத்தில் கொலையாளியை பிடித்த காவல்துறையினருக்கு மக்கள் பாராட்டு.
தினமும் சரக்கு கேட்டு தொந்தரவு செய்த நண்பனைத் துடித்துடிக்க கொலை செய்த இளைஞர்! title=

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வெங்கடசாமி தெரு பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ஈஸ்வரன்(25). இவருக்கு 1 வருடத்திற்கு முன்பு சுகன்யா(19) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில் ஈஸ்வரன் தினம் தோறும் சக நண்பர்களுடன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வருவதாக கூறப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவும்  நண்பர்களுடன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு ஈஸ்வரன் சென்றதாக கூறப்படுகிறது.

பின்னர் வீட்டிற்கு வந்த மனைவி உள்ளே சென்று பார்த்தபோது ஈஸ்வரன் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

மேலும் படிக்க | எதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை நாம் எடுக்க வேண்டும்?

இதைக்கண்டு அதிர்ச்சியுள்ள மனைவி சுகன்யா இச் சம்பவம் குறித்து  ராசிபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். 

போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். பின்னர் இவ்வழக்கில் தொடர்புடையதாக அதே பகுதியை சேர்ந்த லட்சுமணன் என்பவரது மகன் ஜெய மணிகண்டன் (28) காவல்நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், சம்பவத்தன்று ஈஸ்வரன், சக நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. 

அப்போது ஈஸ்வரன் தன்னை அடிமையாக இருக்கக் கூறி தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், தினம்தோறும் மது வாங்கி தர கூறி வற்புறுத்தியதாகவும் ஜெய மணிகண்டன் தெரிவித்தார்.

மேலும், இதனால் ஆத்திரமடைந்து ஈஸ்வரனை அவரது வீட்டிற்குச் சென்று கொலை செய்ததாக காவல் துறையினரிடம் ஜெய மணிகண்டன் வாக்குமூலம் அளித்தார். 

பின்னர் ஜெய மணிகண்டனை கைது செய்து சிறையில் அடைத்தனர். சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்தில் கொலையாளியை பிடித்த காவல்துறையினரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

சக நண்பனையே கொலை செய்த சம்பவம் ராசிபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News