மருத்துவத்துறையில் 4038 பணியிடங்கள் உள்ளன - அமைச்சர் மா.சு அறிவிப்பு

மருத்துவர் செவிலியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் நிறப்ப உள்ளதாக மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்.

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Sep 1, 2022, 04:25 PM IST
  • நவம்பர் 15ஆம் தேதிக்குள் புதிதாக 4038 பணியிடங்கள் நிரப்பப்படும்.
  • சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை
மருத்துவத்துறையில் 4038 பணியிடங்கள் உள்ளன - அமைச்சர் மா.சு அறிவிப்பு title=

திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ. 75 லட்சம் மதிப்பிலான முதியோர் பிரிவு கட்டிடம், ரூ.30 லட்சம் மதிப்பிலான சித்த மருத்துவபிரிவு கட்டிடம் மற்றும் உபயவேதாந்தபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ. 48 லட்சம் மதிப்பிலான புதிய புறநோயாளிகள் பிரிவு கட்டடம், செருமங்கலம், ஆதிச்சபுரம், வெங்கத்தான்குடியில் தலா ரூ. 25 லட்சம் மதிப்பிலான துணை சுகாதார நிலைய கட்டடங்கள் என மொத்தம் ரூ. 2 கோடியே 67 இலட்சம் மதிப்பிலான கட்டிடங்களை தமிழக மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.

மேலும் படிக்க | கர்ப்பப்பையில் இருந்த 6 கிலோ கட்டி அகற்றம்... நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய அமைச்சர் 

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

மருத்துவர் செவிலியர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலியாக உள்ள பணியிடங்கள் நவம்பர் 15ஆம் தேதிக்குள் புதிதாக 4038 பணியிடங்கள் நிரப்பப்படும். எங்கெல்லாம் காலி பணியிடங்கள் இருக்கின்றது என கண்டறியப்பட்டுள்ளதோ அங்கெல்லாம் புதிய பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். 

இதுவரை புதிதாக நிரப்பப்பட்ட 7,448 செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் பணியிடங்களில்   பாதிக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா காலத்தில் பணியாற்றியவர்கள். ஆங்காங்கே ஒரு சில இடங்களில் இருக்கும் ஊழியர்கள் பற்றாக்குறையால் பணி பாதிப்பு என்பது எங்கும் இல்லை. 

தற்கொலைகளுக்கு அதிகம் பயன்படுத்தப்படும்  சாணி பவுடர் விற்பனைக்கு தடை விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்கொலைக்கு ஆதாரமான பொருட்களை மருந்து கடைகளில்  வெளியில் தரும்படி வைக்க கூடாது, தனி நபராக வந்து கேட்பவர்களுக்கு சாணி பவுடர் மற்றும் எலி பேஸ்ட் தரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இன்று காலை வரை இன்னுயிர் காப்போம் திட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரத்து 380 பேர் பயன் பெற்று இருக்கிறார்கள். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 3740 பயனாளிகள் பயன் பெற்றிருக்கிறார்கள்.

இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்தார்.

மேலும் படிக்க | அரசு மருத்துவமனையில் குடிபோதையில் இருந்த மருத்துவரால்  பரபரப்பு: வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News