23 பொருட்களுக்கான GST வரி குறைக்கப்பட்டுள்ளது: ஜெயக்குமார்

ரூ.100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்! 

Updated: Dec 22, 2018, 05:35 PM IST
23 பொருட்களுக்கான GST வரி குறைக்கப்பட்டுள்ளது: ஜெயக்குமார்
Representational Image

ரூ.100க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மைச்சர் ஜெயக்குமார் அறிவித்துள்ளார்! 

சிமெண்ட், டயர்கள், ஏசி இயந்திரங்கள், கட்டுமானப் பொருட்கள் உள்பட 34 பொருட்கள் தற்போது 28 சதவீத வரியை கொண்டுள்ளன. அவற்றை 18 சதவீத வரம்புக்குள் கொண்டு வருமாறு தொழில் வர்த்தகத் துறையினர் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். 

இதனால் பொருட்களின் மீதான GST வரம்பை மறு ஆய்வு செய்வதற்கான கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. மூன்று மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலில் GST காரணமாக BJP-க்கு பின்னடைவு ஏற்பட்டதாக கருதப்படும் நிலையில், பிரதமர் மோடி ஓரிரு ஆடம்பர பொருட்கள் தவிர அனைத்துப் பொருட்களையும் 18 சதவீத வரம்புக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்திருந்தார். 

இதையடுத்து, டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; தமிழகம் சம்மந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். ரூ.100-க்கு மேல் உள்ள சினிமா டிக்கெட்டுகள் மீதான ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் ரூ.100-க்கு உட்பட்ட சினிமா டிக்கெட்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது 

100 ரூபாய்க்கு கீழ் உள்ள சினிமா டிக்கெட்டுக்கான ஜிஎஸ்டி 18%ல் இருந்து 12%ஆக குறைக்கப்பட்டுள்ளது.  தமிழகம் சம்பந்தப்பட்ட 23 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது. இதில் 28% உள்ள பொருட்கள் 12% ஆகவும் சில பொருட்கள் 5% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது என டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்ற பின் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.