மர்ம விலங்கு கடித்ததில் ஆடுகள் பலி

திருப்பத்தூர் அருகே மர்ம விலங்கு கடித்ததில் ஆடுகள் பலியாகியிருப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். 

Written by - S.Karthikeyan | Last Updated : May 26, 2022, 04:33 PM IST
  • திருப்பத்தூரில் ஆடுகள் பலி
  • மர்ம விலங்குகள் கடித்ததில் 9 ஆடுகள் உயிரிழப்பு
  • வனத்துறையினர் நேரில் சென்று விசாரணை
மர்ம விலங்கு கடித்ததில் ஆடுகள் பலி title=

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கே.பந்தரப்பள்ளி என்ற ஊர் இருக்கிறது. அப்பகுதியில் 70 வயதான அலமேலு(70) என்ற பெண் வசித்து வருகிறார். கணவர் திருப்பதி இறந்த நிலையில் தனியாக ஆடு மேய்த்து வருகிறார். இவருக்கு சொந்தமாக சுமார் ஒன்பது ஆடுகள் உள்ளன. வழக்கம்போல் நேற்று ஆடுகள் அனைத்தையும் மேய்ச்சலுக்கு கொண்டு சென்று திரும்பவும் மாலை 6 மணியளவில் வீடு திரும்பியிருக்கிறார். 

மேலும் படிக்க | தாய் மற்றும் 4 மாத குழந்தை மர்மமான முறையில் உயிரிழப்பு

வீட்டின் அருகே உள்ள கொட்டகையில் 9 ஆடுகளையும் கட்டி வைத்துள்ளார். காலை விடிந்ததும் கொட்டகைக்கு சென்றபோது அலமேலு அம்மாளுக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது கொட்டகையில் கட்டப்பட்டிருந்த 9 ஆடுகளும் மர்ம விலங்கு ஒன்று கடித்து உயிரிழந்து கிடந்துள்ளன. ரத்த வெள்ளத்தில் ஆடுகள் இருப்பதை பார்த்து மனம்நொந்த அவர், அக்கம்பக்கத்தில் இருக்கும் கிராம மக்களுக்கும் தெரியப்படுத்தி இருக்கிறார். 

அவர்களும் அலமேலு வீட்டுக்கு வந்து ஆடுகள் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சிக்குள்ளாகினர். இதுகுறித்து அலமேலு பேசும்போது, " 9 ஆடுகள் வளர்த்து வந்தேன். வழக்கம்போல் நேற்று மேய்ச்சலுக்கு ஆடுகளை அழைத்துச் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினேன். ஆடுகளுக்காக வீட்டின் அருகே அமைக்கப்பட்டிருக்கும் கொட்டகையில், 9 ஆடுகளையும் கட்டிவிட்டு, வீட்டில் சென்று உறங்கினேன். காலை எழுந்து பார்த்தபோது அனைத்து ஆடுகளும் இறந்து கிடந்தன. ஆடு மூலம் கிடைக்கும் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த நிலையில், இப்படி நடக்கும் என துளியும் நினைக்கவில்லை" என கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். மேலும், மாவட்ட நிர்வாகம் தனக்கு உரிய உதவி செய்து தர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் படிக்க | ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளில் ஊழல்: முன்னாள் முதல்வர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News